india gdp: இந்தியாவின் பொருளாதாரம் 13.5% வளர்ச்சி: ஏப்ரல்-ஜூன் முதல் காலாண்டு முடிவு அறிவிப்பு
நாட்டின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் 13.5% வளர்ச்சி அடைந்துள்ளது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம்(NSO) தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் 13.5% வளர்ச்சி அடைந்துள்ளது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம்(NSO) தெரிவித்துள்ளது.
கடந்த 4 காலாண்டுகளில் இதுதான் அதிகபட்ச வளர்ச்சியாகும். வேளாண்மை, சேவைத்துறை சிறப்பாகச் செயல்பட்டதையடுத்து, இந்த வளர்ச்சி கிடைத்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
adani: கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 2.5 ஆண்டுகளில் 13 மடங்கு அதிகரிப்பு: வளர்ச்சி என்ன தெரியுமா?
வேகமாக வளரும் பொருளாதார நாடாக சீனாவைவிட இந்தியாதான் தக்கவைத்துள்ளது. ஏப்ரல் ஜூன் காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் 0.4% மட்டுமே வளர்ச்சி அடைந்தது.
ஆனால்,இந்தியாவின் நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சியான 13.5% என்பது ரிசர்வ்வங்கி கணித்த அளவைவிட குறைவு. ரிசர்வ் வங்கி, முதல்காலாண்டில் ஜிடிபி 16.4% வளர்ச்சி பெறும் எனக் கணித்திருந்தது.
september 1: அலர்ட்! செப்டம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள்: தெரிஞ்சுக்கோங்க
2021-22ம்ஆண்டு முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 20.1% வளர்ச்சி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 2021ம்ஆண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ஜிடிபி 8.4%, அக்டோபர்-டிசம்பரில் 5.4%, 2022 ஜனவரி-மார்ச்சில் 4.1சதவீதமாக வளர்ச்சிஅடைந்திருந்தது.
வேளாண் துறையைப் பொறுத்தவரை கடந்த ஆண்டில் 2.2% வளர்ச்சி அடைந்தநிலையில், நடப்பு நிதியாண்டின் முதல்காலாண்டில் 4.5% வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால்உற்பத்தித்துறை கடந்த ஆண்டைவிட 49சதவீதம் சரிந்து 4.8% மட்டுமே வளர்ந்துள்ளது.
வாரன் பஃபெட்டுக்கு பிறந்த நாளும், அவரைப் பற்றி வெளிவராத உண்மைகளும்!!
சுரங்கத்துறை கடந்த ஆண்டின் முதல்காலாண்டில் 18% வளர்ச்சி அடைந்தநிலையில் நடப்பு ஆண்டில் 6.5% மட்டுமே வளர்ந்துள்ளது. சேவைத்துறையைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு முதல்காலாண்டில் 34.4% வளர்ச்சி இருந்தது, நடப்பு ஆண்டில் 25.7% மட்டுமே வளர்ந்துள்ளது. ரியல்எஸ்டேட், தொழில்ரீதியான சேவை 9.2% வளர்ச்சி அடைந்துள்ளது.