adani: கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 2.5 ஆண்டுகளில் 13 மடங்கு அதிகரிப்பு: வளர்ச்சி என்ன தெரியுமா?
தொழிலதிபர் கெளதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த இரண்டரை ஆண்டுகளில் 13 மடங்கு அதிகரித்துள்ளது. உலகிலேயே 3-வது கோடீஸ்வரராக அதானி உயர்ந்துள்ளார்.
தொழிலதிபர் கெளதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த இரண்டரை ஆண்டுகளில் 13 மடங்கு அதிகரித்துள்ளது. உலகிலேயே 3-வது கோடீஸ்வரராக அதானி உயர்ந்துள்ளார்.
அதானியின் சொத்து மதிப்பு 13740 கோடி டாலராகும். இந்திய மதிப்பு ரூ. 11 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 2022ம் ஆண்டில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பு 6000 கோடி டாலர் அதிகரித்துள்ளது.
ncrb: இந்தியாவில் தினசரி 89 பெண்கள் பலாத்காரம்; ஒருமணிநேரத்துக்கு 49 குற்றம்: என்சிஆர்பி தகவல்
2020ம் ஆண்டில் அதானி சொத்து மதிப்பு 1000 கோடி டாலராக இருந்தது. இது தற்போது 137 பில்லியன் அதாவது ரூ.11 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. ஆசியாவிலேயே பெரும் பணக்காரராக பெயரெடுத்த ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானியை தோற்கடித்து அதானி முன்னேறியுள்ளார்.
அதுமட்டும்லாமல் லூயிஸ் விட்டான் தலைவர் மற்றும் சிஇஓ பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்குத் தள்ளி, உலகக் கோடீஸ்வர்களில் முதல் 3 இடங்களுக்குள் முன்னேறிய ஆசியாவின் முதல் நபர் எனும் பெருமையைப் பெற்றார்.
ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.17.70 லட்சம் கோடி, டிசிஎஸ் நிறுவனத்தின்மதிப்புரூ.11.80 லட்சம் கோடியாகும். இதற்கு அடுத்தார்போல், தனிநபரான அதானி சொத்து மதிப்பு ரூ.11 லட்சம் கோடியாக இருக்கிறது. 2021ம் ஆண்டிலிருந்து அதானிக்கு வாரத்துக்கு ரூ.6 ஆயிரம் கோடி சொத்து சேர்கிறது. அதானி குழுமத்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ. 20 லட்சம் கோடியாக இருக்கிறது.
கடந்த 1988ம் ஆண்டு அதானி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை கெளதம் அதானி தொடங்கினார். கமாட்டிகளை வர்த்தகம் செய்யும் நிறுவனமாக அதானி தொடங்கி முந்த்ரா துறைமுகத்துக்குள் நுழைந்து நிலக்கரி ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வர்த்தகராக வளர்ந்தார்.
இப்போதுவரை நாட்டிலேயே அதிகமாக நிலக்கரி ஏற்றுமதி செய்யும் நிறுவனமான அதானி குழுமம் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் அரசுக்கு அதிகமாக அன்னியச் செலாவணி ஈட்டிய நிறுவனமாகவும் அதானி குழுமம் இருக்கிறது.
சமீபத்தில் அதானி குழுமம் ஏராளமான வர்த்தகங்களில் தடம் பதித்தது. அதானி என்டர்பிரைசஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ் அன்ட் செஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ், அதானி பவர், அதானி வில்மர் ஆகிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.
கணக்கு போட தெரியாமல் முளித்த தலைமை ஆசிரியர்… அதிரடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்… வைரலாகும் வீடியோ!!
கடந்த இரு ஆண்டுகளில் அதானி குழுமத்தில் சில நிறுவனங்கள் 1000 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளன. 2020ம் ஆண்டிலிருந்து அதானி டோட்ல் கேஸ், அதானி கிரீ்ன் பங்குகள் 1000 சதவீதம் உயர்ந்துள்ளன.
அதானி என்டர்பிரைசஸ் நிறுனப் பங்கு மதிப்பு 2020ம் ஆண்டிலிருந்து 1400 மடங்கும், அதானி டிரான்மிஷன் 1000 சதவீதமும் வளர்ந்துள்ளது. அதானி போர்ட்ஸ் பங்கு மதிப்பு 120 மடங்கு உயர்ந்துள்ளது