கணக்கு போட தெரியாமல் முளித்த தலைமை ஆசிரியர்… அதிரடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்… வைரலாகும் வீடியோ!!

மத்தியப் பிரதேசத்தில் வகுத்தல் கணக்கு பொடத் தெரியாத பள்ளி தலைமை ஆசிரியரை பொறுப்பில் இருந்து நீக்கி மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். 

collector dismissed headmaster of a school who did not know to division

மத்தியப் பிரதேசத்தில் வகுத்தல் கணக்கு பொடத் தெரியாத பள்ளி தலைமை ஆசிரியரை பொறுப்பில் இருந்து நீக்கி மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மத்தியப் பிரதேசம் பாலகாட் மாவட்டத்தில் ஆட்சியராக இருப்பவர் கிரிஷ் குமார். அவர் சமீபத்தில் தனது மாவட்டத்தில் உள்ள ஆரம்பப் பள்ளிகளுக்குச் சென்று பள்ளியின் நிலை குறித்து ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு கணக்கு உள்ளிட்ட பாடங்கள் எவ்வாறு கற்றுத் தரப்படுகின்றன என்பது குறித்தும் குழந்தைகளின் கிரகிப்புத் திறன் குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது வகுப்பறையில் உள்ள மாணவர்களோடு உரையாடிய ஆட்சியர் கிரிஷ் குமார், கரும்பலகையில் 411 என்ற எண்ணை 4 ஆல் வகுக்கச் சொல்லிக் கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: பிரதமரின் புதிய இந்தியா இளைஞர்களுக்கான வாய்ப்புகள் நிறைந்தது… மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கருத்து!!

ஆனால் அங்கிருந்த குழந்தைகள் யாருக்கு அது தெரியவில்லை. இதை அடுத்து தலைமை ஆசிரியை சோனா துருவேவிடம் அந்த கணக்கைப் போடுமாறு கேட்டுள்ளார். ஆனால் வகுத்தல் கணக்கை ஆசிரியை சோனா தவறாகப் போட்டுள்ளார். சரியாக கணக்கைச் செய்யுமாறு, ஆட்சியர் தலைமை ஆசிரியரிடம் கூறிய போதுதான் தலைமை ஆசிரியருக்கே அந்த கணக்கு போட தெரியவில்லை என்பது தெரியவந்தது. இதை அடுத்து, ஆட்சியர் கிரிஷ் குமார், இந்த சிறிய கணக்கைக் கூட உங்களால் போட முடியவில்லை என்றால், எப்படி மாணவர்களுக்குக் கற்பிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் ‘கூடாரம் காலி’: குலாம் நபிக்கு ஆதாரவாக 50 நிர்வாகிகள் விலகல்

இதுமட்டுமின்றி தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்து சோனாவை நீக்கியதோடு, அவருக்கு வர வேண்டிய ஊதிய உயர்வையும் நிறுத்தி வைத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதேபோல இன்னொரு அரசுப் பள்ளிக்கும் பாலகாட் ஆட்சியர் கிரிஷ் குமார் ஆய்வுக்குச் சென்றுள்ளார். அங்குள்ள ஆசிரியராலும் கணக்கைச் செய்ய முடியாமல் போனது. இது அங்குள்ள பள்ளிகளின் கல்வித் தரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios