Asianet News TamilAsianet News Tamil

gulam nabi azad: ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் ‘கூடாரம் காலி’: குலாம் நபிக்கு ஆதாரவாக 50 நிர்வாகிகள் விலகல்

குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சியிலிருந்து 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். 

More than 50 Jammu and Kashmir Congress leaders resigned in support of Ghulam Nabi Azad.
Author
First Published Aug 30, 2022, 5:29 PM IST

குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சியிலிருந்து 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். 

காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய குலாம் நபி ஆசாத், தலைமையுடனும், ராகுல் காந்தியுடனும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியிலிருந்து நேற்று விலகினார். காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு, அனைத்து பதவிகளில் இருந்தும் ஆசாத் விலகுவதாக அறிவித்து சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார்.

kejriwal: anna hazare: ‘கெஜ்ரிவாலுக்கு அதிகார போதை தலைக்கு ஏறிவிட்டது’: அண்ணா ஹசாரே தாக்கு

அதுமட்டுமல்லாமல் ஜம்மு காஷ்மீர் சென்று புதிதாக கட்சி தொடங்கப் போதவாகவும் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது இதையொட்டி இந்த முடிவை ஆசாத் எடுத்திருக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில்  பேசப்படுகிறது.

இதற்கிடையே குலாம் நபி ஆசாத் காங்கிரஸிலிருந்து வெளியேறியது தெரிந்தவுடன் ஜம்மு காஷ்மீரில் உள்ள அவரின் ஆதரவாளர்கள், முக்கிய தலைவர்கள் பலரும் காங்கிரஸிலிருந்து வெளியேறினர். இதனால் குலாம் நபிஆசாத் புதிய கட்சியை தொடங்கும்  பணி விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது.

pm narendra modi:‘காந்திக்குப் பிறகு மோடிதான்’: ராஜ்நாத் சிங் புகழாரம்

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள், தலைவர்கள் என 50 பேர் திடீரென கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இதில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் தாரா சந்த் அடங்கும். இவர்கள் அனைவரும் தங்கள் ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளனர்.

தாரா சந்த் தவிர, முன்னாள் அமைச்சர்கல் அப்துல் மஜித் வானி, மனோகர் லால் ஷர்மா, காரு ராம், பல்வான் சிங் ஆகியோரும் இன்று காங்கிரஸிலிருந்து அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுவதாகத் அறிவித்தனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கூட்டாக ராஜினாமா கடிதம் அனுப்பி இருப்பதாக முன்னாள் எம்எல்ஏ பல்வான் சிங் தெரிவித்தார்.

ncrb: சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களி்ல் 70,000 பேர் 'டூவீலர் ஓட்டிகள்': தமிழகம் முதலிடம்: என்சிஆர்பி தகவல்

குலாம் நபி ஆசாத் காங்கிரஸிலிருந்து வெளியேறியதுதெரிந்தவுடன் மூத்த தலைவர்கள், பஞ்சாயத்ராஜ் அமைப்பின் உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட, மண்டல அளவிலான தலைவர்கள், நிர்வாகிகள், நகர்மன்ற தலைவர்கள், ஆதராளர்கள் என ஏராளமானோர் கட்சியின் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்துவிட்டனர். வரும் செப்டம்பர் 4ம் தேதி குலாம் நபி ஆசாத் , தனது நலம் விரும்பிகளுடன் ஆலோசனை நடத்தஉள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios