காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீடு இருக்கக்கூடாது என, பிரான்ஸ்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்  தெரிவித்துள்ளார்,ஏற்கனவே இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு கொடுத்துள்ள நிலையில் பிரான்சும்  அந்த வரிசையில் இணைந்துள்ளது.

காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் சர்வதேச பிரச்சனையாக மாற்றி அதில் உலக நாடுகளை மத்தியஸ்தம் செய்ய அழைப்பு விடுத்து வருகிறது, இந்நிலையில் அந்த முயற்ச்சிகளை இந்தியா முறியடித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனாவிற்க்கும், மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ரஷ்யாவிற்கும் பயணம் மேற்கொண்டு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் தரப்பு நியாயத்தை எடுத்து சொல்லியுள்ளனர், அதில் ரஷ்யா இந்தியாவின் நடவடிக்கையை ஏற்றதுடன் அமெரிக்கா போன்ற நாடுகள் இந்திய நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளது.

இந்ந நிலையில் நேற்று பிரதமர் மோடி ஐந்துநாள் பயணமாக, பிரான்ஸ், மற்றும் ஐக்கிய அரபு ஆமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம்மேற்க்கொண்டுள்ளார், 22 ஆம் தேதி பிரான்ஸ் விரைந்த பிரதர் மோடிக்கு அங்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது, இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் சந்தித்து உரையாற்றினார். அப்போது, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் பக்கம் உள்ள நியாய தர்மங்களை பிரதமர் அவருடன் பகிர்ந்து கொண்டார், மற்றும் பல்வேறு பிரச்சனைகள் பற்றி விவாதித்தனர், பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிற அதில் மூன்றாவது நாட்டின் தலையீடு இருக்கக்கூடாது என்றார். 

இத்துடன் இந்தியாவுடன் இராணுவம், பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி, போன்ற துறைகளில்  இணைந்து செயல்பட விரும்புவதாக கூறினார், இந்தியாவிற்குள் தீவிரவாத ஊடுறுவல்களை தடுப்பது, மற்றும் தீவிர வாதத்தை ஒழிப்பதில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என்றார், அனைத்திற்கும் உச்சமாக, இந்தியவிற்கு அடுத்த மாத துவக்கத்தில் ரபேல் போர் விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டும் என்றும் அவர் தெரவித்தார்.

பிரான்ஸ் இந்தியா சந்திப்பு ,பாகிஸ்தான் ,மற்றும் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது, காஷ்மீர் விவகாரத்தில்இந்தியா பாகிஸ்தான் இடையை மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது என்று மீண்டும் பிரச்சனை கிளப்பிய ட்ரம்புக்கு பிரான்ஸின் அறிவிப்பு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இந்தியா பிரான்ஸ் இராணுவம் மற்றும் பாதுகாப்பில் இணைந்து செயலாற்றும் என்றும், தீவிரவாத ஊடுறுவலை தடுப்பதிலும் இணைந்தே பணியாற்றும் என்றும் அறிவித்திருப்பது பாகிஸ்தானை குறிவைத்தே சொல்லப்பட்டதற்கான பாகிஸ்தான் கருதுகிறது.  இதனால் பாகிஸ்தானும் அதற்கு உதவிசெய்யும் சீனாவிற்கும் பிரான்ஸ் விடுக்கும் எச்சரிக்கை என்றே எடுத்துக்கொள்ளலாம்.