இதே வேகத்துல போனா.. பூமியே எரியும் அபாயம்..! மனித இனத்திற்கு இயற்பியல் அறிஞரின் எச்சரிக்கை..!

physicist warns earth will fire
physicist warns earth will fire


தற்போதைய வேகத்தில் தொடர்ந்து மக்கள் தொகை அதிகரித்து, அதிகளவில் மின்சாரம் மற்றும் எரிபொருட்கள் பயன்படுத்தி வந்தால் இன்னும் 600 ஆண்டுகளில் இந்த பூமியே தீப்பந்து போல் எரியும் என்று பிரிட்டன் இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாகின்ஸ் எச்சரித்துள்ளார்.

பீஜிங்கில் நடந்த அறிவியல் மாநாட்டில் வீடியோ மூலம் தோன்றி ஸ்டீபன் ஹாகின்ஸ் பேசியதாவது: 

உலகளவில் மக்கள் தொகை அதிவேகமாக அதிகரித்துக் கொண்டு வருகிறது. எனவே அதற்கேற்றாற்போல எரிபொருள் தேவையும் அதிகரித்துவருகிறது. இதனால், இன்னும் 600 ஆண்டுகளில் அதாவது 27-ம் நூற்றாண்டில்(2,600-ம் ஆண்டுகளில்) இந்த பூமியே தீப்பந்துபோல எரிவதற்கான வாய்ப்பு உள்ளது.

எனவே இந்த பேரழிவிலிருந்து மனித இனத்தைக் காக்க வேண்டுமானால், வேறு கிரகத்திற்கு மனிதன் செல்ல வேண்டும். சூரிய மண்டலத்திற்கு வெளியே இருக்கும் நட்சத்திரங்களுக்கு மக்கள் குடிபெயரலாம்.

அல்பா சென்ட்டாரி என்ற நட்சத்திரம் சூரிய மண்டலத்திற்கு அருகே உள்ளது. 4 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த நட்சத்திரத்தில் இருக்கும் கிரகங்களில் மக்கள் குடிபெயரலாம். பூமியைப் போன்று மக்கள் குடியிருக்க தகுந்த கிரகங்கள் இந்த நட்சத்திரத்திற்குள் இருக்கின்றன. இன்னும் 20 ஆண்டுகளில் ஒளியை விட அதிக வேகத்தில் செல்லும் சிறிய விமானத்தின் மூலம் இந்த நட்சத்திர கிரகத்தை அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு ஸ்டீபன் ஹாகின்ஸ் எச்சரித்துள்ளார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios