ரஷ்ய அதிபர் புதினின் இந்தியப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையேயான ராணுவ உறவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் எதிரி இனி ரஷ்யாவின் எதிரி என்ற புதிய நிலைப்பாடு, இந்த உறவின் எதிர்கால ஆழத்தை சுட்டிக்காட்டுகிறது.
உலக அரசியல் சூழலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு வந்த இரண்டு நாள் அரசு பயணம், இந்தியா–ரஷ்ய உறவை மீண்டும் முன்னெடுத்தது. அமெரிக்கா அழுத்தம் கொடுத்தாலும், ரஷ்யா எண்ணெய் வாங்கியதற்கான அபராத வரி விதித்தாலும் இந்தியா மாஸ்கோவை விட்டு விலகவில்லை என்பதை காட்டியது.
மேற்கு நாடுகளில் இருந்த இந்தியா
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா முக்கியமாக பிரிட்டன் மற்றும் மேற்கு நாடுகளிடமிருந்தே ஆயுதங்களை பெற்றது. ஆனால் 1950களில் இந்தியா சப்ளையர்களை பல்வகைப்படுத்தி, ரஷ்யாவை நோக்கி கவனம் செலுத்தத் தொடங்கியது. விமானங்கள், போக்குவரத்து தளம் மற்றும் ஆயுதங்கள் முதலில் ரஷ்யாவிலிருந்தே பெறப்பட்டன.
மேக் இன் இந்தியா இருந்தும் ரஷ்ய ஆதரவு
Stockholm International Peace Research Institute (SIPRI) அறிக்கையின்படி, 2020–24 உலகளாவிய ஆயுத இறக்குமதியில் இந்தியா 8.3% பங்குடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. 2024-ல் இந்தியாவிற்கு வரும் ஆயுதங்களில் 36% ரஷ்யாவிலிருந்து வந்துள்ளது. 2010–14-ல் இந்த பங்கு 72% இருந்தது எனும் தகவல், இந்தியா மெதுவாக வேறு நாடுகளிடமும் வாங்கத் தொடங்கியதைக் காட்டுகிறது.
இந்திய ராணுவத்தில் நீண்ட பயணம்
1950-ல் Ilyushin Il-14 விமானம் இந்திய ராணுவத்தில் இணைந்தது முதல், MiG–21 போர் விமானம் 1963-ல் வந்தது வரை, ரஷ்ய வடிவமைப்பு இந்திய வான்படைக்கு முதுகெலும்பாக இருந்தது. மேலும், INS விக்ரமாதித்யா, T–72 மற்றும் T–90 டேங்குகள், 1967-ல் சேவையில் சேர்ந்த INS கல்வாரி போன்ற நீர்மூழ்கிக் கப்பல்கள் என அனைத்தும் ரஷ்ய தொழில்நுட்பத்தின் தடம் ஆகும்.
AK-203 இந்திய உற்பத்தி ஒப்பந்தம்
ஏகே–47 வகை ரஷ்ய துப்பாக்கிகள் இந்தியாவால் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் அமேதியில் உள்ள தொழிற்சாலையில் AK–203 ரைஃபிள்களை உற்பத்தி செய்வதற்கான உடன்படிக்கை இந்தியா–ரஷ்ய உறவை மேலும் ஆழப்படுத்தியது.
பிரஹ்மோஸ் & எஸ்–400
1998-ல் தொடங்கிய BrahMos ஏவுகணை திட்டம், இரு நாடுகளின் இணைந்து உருவாக்கப்பட்ட மிகப்பெரும் வெற்றி ஆகும். பாகிஸ்தான் மீது நடந்த சில நடவடிக்கைகளில் பிரமோஸின் தாக்குதல் வெளிப்பட்டது. மேலும் ரூ.35,000 கோடி மதிப்புள்ள S–400 ஏவுகணை அமைப்பு ஒப்பந்தம், அமெரிக்க தடைவிதிப்பு சாத்தியம் இருந்தும் இந்தியா உறுதியுடன் முன்னெடுத்த முக்கிய பாதுகாப்பு முதலீடாகும்.
எதிர்காலமும் ரஷ்ய திசையில்
மேக் இன் இந்தியா திட்டம் உள்ளது, புதிய உற்பத்தி முயற்சிகள் முன்னேறும், ரஷ்ய ஆயுத வடிவமைப்புகள் மற்றும் கூட்டு உற்பத்தி இந்தியாவின் பாதுகாப்பு வலையில் முக்கிய இடத்தை தொடர்ந்து வகிக்கின்றன. எதிர்காலத்தில் கூடுதல் மேம்பட்ட தளங்கள், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் கூட்டு உற்பத்தி இந்தியா–ரஷ்ய ராணுவ உறவை இன்னும் ஆழப்படுத்துமென நிபுணர்கள் கணிக்கிறார்கள்.
இனி ரஷ்யாவின் எதிரி
இந்தியாவின் எதிரி… இனி ரஷ்யாவின் எதிரி!. இது ஒரு சாதாரண சொல்லல்ல. உலக தளத்தில் உருவாகும் புதிய ராணுவ உண்மை. பல ஆண்டுகளாக இந்தியாவுடன் நெருக்கமான ராணுவ, தொழில்நுட்ப, பாதுகாப்பு கூட்டாண்மை கொண்ட ரஷ்யா, இப்போது ஒரு விஷயத்தை தெளிவாகச் சொல்கிறது, இந்தியாவை அச்சுறுத்துபவரை எதிர்க்கும் நிலைக்கு நாங்கள் வந்துவிட்டோம். யாராலும் இப்போது விளையாடிப் பார்க்க முடியாது என்றும், இந்தியாவின் பாதுகாப்பு வட்டத்தில் ரஷ்யாவின் நிறை ஆதரவு இணைந்துவிட்டது என்றும் தெளிவாக தெரிகிறது.


