புகைப்படத்தில் துரத்தும் பேய்; அதிர்ந்து போய் இருக்கும் சிறுவன்.
லாரா வாட்சன் என்பவர் தனது இரண்டு குழந்தைகள், மற்றும் சொந்தகாரரின் மகனுடன், அப்பகுதியில் இருக்கும் ”ப்ளஸ்ஸி வூட்ஸ் கண்ட்ரி” எனும் பூங்காவிற்கு சென்றிருக்கிறார். அங்கு குழந்தைகள் மரத்தில் ஏறி விளையாடி இருக்கின்றனர். அந்த மகிழ்ச்சியான தருணத்தை புகைப்படம் எடுத்திருக்கிறார் லாரா வாட்சன்.
அந்த புகைப்படத்திற்கு லாராவின் மகன், மரத்தின் அருகிலும் மகள் மற்றும் சொந்தக்கார சிறுவன், மரத்தின் மீதும் நின்றபடி வேடிக்கையாக போஸ் கொடுத்திருக்கின்றனர்.
அந்த புகைப்படத்தை எடுத்த லாரா பிறகு அதை பார்வையிட்ட போது அதிர்ந்து போயிருக்கிறார். ஏனென்றால் அந்தப் படத்தில், அவரது மகன் பிரின்-ன் தோளில் கை வைத்தபடி ஒரு உருவம் இருந்திருக்கிறது.
பார்ப்பதற்கு ஒரு சிறு குழந்தை போல அந்த உருவம் இருக்கவும் ,குழம்பிப் போயிருக்கிறார் லாரா. ஏனென்றால் அந்த பகுதியி அப்படி யாருமே இல்லை. இதனால் அந்த உருவம் கண்டிப்பாக ஒரு பேயாக தான் இருக்கும். என நினைத்து பயந்து போயிருப்பதாக தெரிவித்திருக்கிறார் லாரா.
எனது கணவர் இரவு நேரம் தான் பணிக்கு செல்வார். இப்போதெல்லாம் குழந்தைகளுடன் வீட்டில் இருக்கையில் மிகவும் பயமாக இருக்கிறது. அந்த பேய் உருவம் எங்களை தொடர்ந்து இங்கேயும் வந்து விடுமோ? என பயமாக இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.
இது நிஜம் அல்ல போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படமாக தான் இருக்கும் என கூறிவருகின்றனர், அமானுஷ்யங்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். ஆனால் லாரா தெரிவிப்பது என்னவென்றால், எனக்கு இது போன்ற தொழில்நுட்பங்கள் எதுவும் தெரியாது. இது உண்மையான புகைப்படம் என்பது தான்.