85 பேரும் சென்ற ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்து.. 17 பேர் பலி.. 40 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
பிலிப்பைன்ஸ் நாட்டில் 85 பேருடன் சென்ற ராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிலிப்பைன்சின் தென் பகுதியில் தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ளதால், அவர்களை கட்டுப்படுத்த ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்நிலையில், தெற்கு பகுதியில் உள்ள சுலு மாகாணத்தின் ஜோலோ தீவில், தரையிறங்கும் போது 85 பேருடன் சென்ற ராணுவ விமானம் திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து தொடர்பாக உடனே மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 40 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 17 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.