Lighting Struck in Soccer Field : கால்பந்தாட்ட மைதானத்தில் வீரர்கள் நடந்து சென்றபோது மின்னல் தாக்கியதில் ஒரு வீரர் உடல் கருகி பலியாகியுள்ளார்.

பெரு நாட்டில் உள்ள பிரபலமான கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது, திடீரென மின்னல் தாக்கியதில், அங்கிருந்த கால்பந்தாட்ட வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், பெரு நாடு மக்களிடையே பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மின்னல் தாக்கிய சம்பவத்தில் மேலும் ஐந்து கால்பந்தாட்ட வீரர்கள் காயமடைந்துள்ளதாக பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. 

இறந்த அந்த பெரு நாட்டு வீரர் 39 வயதான ஜோஸ் ஹியூகோ டி லா குரூஸ் மெசா என அடையாளம் காணப்பட்டுள்ளர். மைதானத்தில் கால்பந்தாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென மழை குறுக்கீட்டுள்ளது. அதனால் நடுவர் ஆட்டத்தை ஓதிவைத்த நிலையில், வீரர்கள் அனைவரும் மீண்டும் ஸ்டேடியத்திற்குள் சென்றுள்ளனர். அப்போது 5 வீரர்கள் மைதானத்தில் நடந்து சென்ற நிலையில், திடீரென பயங்கர மின்னல் ஒன்று மைதானத்தில் விழுந்தது. இதில் 39 வயதான ஜோஸ் மீது மின்னல் நேரடியாக விழுந்த நிலையில், அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் 5 பேருக்கு உடலில் மின்னலால் தீ காயங்கள் ஏற்பட்டுள்ளது. 

உலகின் டாப் 10 மகிழ்ச்சியான நாடுகள் இவை தான்! இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

ஜுவான் சோக்கா லாக்டா என்ற 40 வயது கோல்கீப்பரும் இந்த தாக்குதலுக்கு உள்ளானார், அவரது உடலில் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 16 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளைஞர்கள் மற்றும் 24 வயதான கிறிஸ்டியன் சீசர் பிடுய் கஹுவானா ஆகியோர் காயமடைந்துள்ளனர் என்று உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. டிஃபெண்டர் ஜோஸ் ஹ்யூகோ டி லா க்ரூஸ் மேசா இறந்த நிலையில், எரிக் எஸ்டிவன் செசென்டே குய்லர், ஜோஷெப் குஸ்டாவோ பரியோனா சோக்கா மற்றும் கிறிஸ்டியன் சீசர் பிடுய் கஹுவானா போன்றவர்கள் மின்னல் தாக்கியதில் இப்பொது மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். 

Scroll to load tweet…

உள்ளூர் பத்திரிகைகள் அளித்த தகவலின்படி, கோல்கீப்பர் ஜுவான் சோக்கா லாக்டாவும் இப்பொது ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு பிப்ரவரியில், இந்தோனேசிய கால்பந்து வீரர் ஒருவர் 2 FLO FC பாண்டுங் மற்றும் FBI சுபாங் இடையேயான ஆட்டத்தின் போது மின்னல் தாக்கி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே கடந்த 12 மாதங்களில் நடக்கும் இரண்டாவது மின்னல் தாக்குதல் இதுவாகும். 

பூமியின் கடைசி நாள் நெருங்கிவிட்டது! விஞ்ஞானிகள் சொல்லும் அதிர்ச்சி தகவல்!