பெரு நாட்டில் மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

பெரு நாட்டின் காண்டா மாகாணத்தில் மினி பேருந்து ஒன்று 27 பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர், பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 19 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதில் 11 பெண்கள், 8 ஆண்கள் அடங்குவர். 

இந்த விபத்து தொடர்பாக மீட்டுபடையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.