Asianet News TamilAsianet News Tamil

சிங்கப்பூரில் பெர்சீட்ஸ் எரிகல் பொழிவு! இந்த அரிய வானியல் நிகழ்வை மிஸ் பண்ணாம பாருங்க!

பெர்சியஸ் விண்மீன் மண்டலத்தின் அதே திசையில் இருந்து எரிகல் பொழிவு நிகழ்வதால் இதற்கு பெர்சீட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. 

Perseids meteor shower over Singapore: What is it and when to catch it
Author
First Published Aug 9, 2023, 11:21 AM IST

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை நடுப்பகுதியில் இருந்து ஆகஸ்ட் பிற்பகுதிக்குள் பெர்சீட்ஸ் எனப்படும் எரிகல் பொழிவு நிகழ்கிறது. இந்த அரிய வானியல் நிகழ்வு ஜூலை 17ஆம் தேதி தொடங்கும் இந்த எரிகல் பொழிவு ஆகஸ்டு 13ஆம் தேதி உச்சம் பெற்று ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை நீடிக்கும். 

பெர்சீட்ஸ் எரிகல் பொழிவு என்றால் என்ன?

பெர்சியஸ் விண்மீன் மண்டலத்தின் அதே திசையில் இருந்து எரிகல் பொழிவு நிகழ்வதால் இதற்கு பெர்சீட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. கிரேக்க புராண நாயகனின் பெயரால் பெயரிடப்பட்ட இது 24வது பெரிய விண்மீன் கூட்டமாகும் என்று சிங்கப்பூர் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தானில் இம்ரான் கான் தகுதிநீக்கம்! முன்கூட்டியே ஆட்சியைக் கலைக்கும் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்!

Perseids meteor shower over Singapore: What is it and when to catch it

பெர்சியஸ் விண்மீன் தொகுப்பை உள்ள திசையில் பெர்சியஸ் எரிகல் பொழிவு நிகழ்வதைக் காணலாம். விண்வெளி குப்பைகளின் பாதை வழியாக பூமி செல்லும்போது பெர்சீட்ஸ் எரிகல் பொழிவு காட்சி ஏற்படுவதாகவும் ஆய்வகம் கூறுகிறது. 

ஸ்டார்கேசிங் சிங்கப்பூர் பொழுதுபோக்குக் குழுவின் நிறுவனர், திருமதி ஜெரார்டின் பிரிட்டோஸ், பெர்சீட் எரிகல் பொழிவு உச்சம் அடையும் போது மிகவும் பிரகாசமாக இருக்கும். அதிக எண்ணிக்கையிலான பிரகாசமான விண்கற்களைக் காண்பது மிகவும் பிரபலமானது" என்றும் சொல்கிறார்.

சந்திரயான்-3 இல் சென்சார், விக்ரம் லேண்டர் பழுதானால் என்ன ஆகும்? இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கம்

Perseids meteor shower over Singapore: What is it and when to catch it

எப்போது பார்க்க முடியும்?

சிங்கப்பூரில் வான் நிகழ்வைக் கண்டுகளிப்பது எளிதானது அல்ல. இருப்பினும், ஆகஸ்ட் 13 அன்று அதிகாலை 4 மணிக்கு பார்ப்பது சரியாக இருக்கும். அப்போதுதான் விண்மீன் கூட்டம் அடிவானத்திற்கு மேலே போதுமான அளவு பார்க்கக்கூடிய உயரத்தில் இருக்கும். 

அப்போதுதான் அதிகபட்ச விண்கற்களைக் கண்டறிய முடியும். ஒளி மாசு மற்றும் மேக மூட்டம் இல்லாவிட்டால் இவற்றை வெறும் கண்களால் பார்க்க முடியும். அதிக வெளிச்சத்தினால் ஏற்படக்கூடிய கேடு குறைவாக இருக்கக்கூடிய, திறந்தவெளி இடங்களில் காணலாம் என்றும் நட்சத்திரக் கூட்டத்தைச் சுற்றி இருக்கும் இருட்டான பகுதிகளில் எரிகல் பொழிவைக் காணலாம் என்றும் ஆய்வகம் கூறுகிறது.

பகத் சிங், துர்கா தேவிக்கு உதவிய சுசீலா திதியின் அறியப்படாத வீர வாழ்க்கை வரலாறு

Follow Us:
Download App:
  • android
  • ios