பகத் சிங், துர்கா தேவிக்கு உதவிய சுசீலா திதியின் அறியப்படாத வீர வாழ்க்கை வரலாறு

லாகூரில் 17 டிசம்பர் 1927 இல் சாண்டர்ஸ் படுகொலை செய்யப்பட்ட பிறகு, பகத் சிங்கும் துர்கா தேவியும் தங்குவதற்கு ஏற்பாடு செய்தவர் சுசீலா திதி. 

Independence Day 2023: The Forgotten Life Of Sushila Didi, Who Helped Bhagat Singh In Hiding

அறியப்படாத வீராங்கனை

மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங் மற்றும் சந்திர சேகர் ஆசாத் போன்ற பல தலைவர்கள் பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியா விடுதலை பெறுவதில் முக்கிய பங்கு வகித்தனர். இருப்பினும், ஏரளமான வரலாற்று நாயகர்கள் அறியப்படாதவர்களாக உள்ளனர். அவர்களின் வீரம் அங்கீகரிக்கப்படவில்லை. அவர்களின் தியாகத்தை இன்றைய தலைமுறை அறியவில்லை. விடுதலை இயக்கத்தின் வரலாற்றில் அத்தகைய ஒரு பெயர் சுசீலா திதி என்று அன்புடன் அழைக்கப்படும் சுசீலா மோகன். இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் துணிச்சலான பெண் புரட்சியாளர்களில் ஒருவராக அவர் தனித்து நிற்கிறார்.

சுசீலா மோகன் 1905 இல் பிறந்தார். அவர் டெல்லியில் வசித்தவர் மற்றும் நகரத்தின் முக்கிய புரட்சியாளர். ஜலந்தரில் பிறந்தார். அரசியல் நடவடிக்கைகளின் மையமாக இருந்த நகரத்தில் ஆர்யா மகளிர் கல்லூரியில் தனது படிப்பை முடித்தார். பகத் சிங், பகவதி சரண் வோஹ்ரா மற்றும் துர்கா தேவி போன்ற புரட்சியாளர்களுடன் அவர் பணியாற்றினார்.

இஸ்ரோ முதல் கோவிட்-19 வரை! சுதந்திர இந்தியாவின் வியக்க வைக்கும் அறிவியல் தொழில்நுட்ப சாதனைகள்

Independence Day 2023: The Forgotten Life Of Sushila Didi, Who Helped Bhagat Singh In Hiding

பகத் சிங்குக்கு உதவி

இந்துஸ்தான் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்பக் உல்லா கான், ரோஷன் சிங் மற்றும் ராஜேந்திர லஹிரி ஆகியோரின் மரணதண்டனை அவரை புரட்சிகர இயக்கத்தில் சேர தூண்டியது. 1927ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி ஜான் சாண்டர்ஸ் படுகொலை செய்யப்பட்ட பிறகு கொல்கத்தாவில் பகத் சிங் தலைமறைவாக இருப்பதற்கு ஏற்பாடு செய்தார்.

டெல்லி மற்றும் லாகூர் சதி வழக்குகளில் விசாரணைக்குட்பட்ட புரட்சியாளர்களன் வழக்குச் செலவுகளுக்காக நிதி திரட்ட சுசீலா திதி. அதற்காக சக பெண் புரட்சியாளர்களுடன் சேர்ந்து பகத் சிங் பாதுகாப்புக் குழுவை உருவாக்கினார்.

1930இல் பகவதி சரண் வோஹ்ரா மற்றும் பிற தேசியவாதிகள் வைஸ்ராய் இர்வின்னைக் கொல்ல திட்டம் தீட்டியபோது, ​​வைஸ்ராய் இர்வின் செல்லும் ரயிலின் தகவல்களை சேகரித்து உளவு பார்க்கும் பணி சுசீலா திதிக்கு வழங்கப்பட்டது. அவர் அளித்த தகவலின்படி பகவதி சரண் வோஹ்ரா உடனடியாக செயல்பட்டபோதும் அந்தத் திட்டம் நிறைவேறாமல் போனது. கையில் இருந்த வெடிகுண்டு தவறுதலாக வெடித்ததில் பகவதி சரண் வோஹ்ரா பலியானார்.

நிலவுக்கு 100 கி.மீ. தொலைவில் சந்திரயான்-3... இஸ்ரோவுக்கு இனிதான் பெரிய சவால் காத்திருக்கு!

Independence Day 2023: The Forgotten Life Of Sushila Didi, Who Helped Bhagat Singh In Hiding

சுசீலாவின் சதித் திட்டம்

பின்னர், சந்திரசேகர் ஆசாத்தின் மரணம் மற்றும் பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோரின் மரணதண்டனைக்குப் பிறகு சுசீலா திதி இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசுக் கழகத்தின் பொறுப்பாளராக ஆனார். பகத், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோரின் கொலைகளுக்கு பழிவாங்குவதற்காக பஞ்சாப் அரசாங்க செயலாளரான சர் ஹென்றி கிர்க்கைக் கொல்ல சுசீலா திதி திட்டம் தீட்டினார். இந்தத் திட்டத்தைப் பற்றிய சில தகவல்களைப் பெற்ற காவல்துறை பல புரட்சியாளர்களை கைது செய்தது. இதனால் அவர் தீட்டிய திட்டம் கைகூடவில்லை.

1932 ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் சுசீலா திதியும் பங்கேற்றார். அந்த மாநாட்டை பிரிட்டிஷ் அரசு தடை செய்திருந்தது. அப்போது சுசீலா திதி கைது செய்யப்பட்டு ஆறு மாத சிறைத்தண்டனை பெற்றார். 1937ல் அந்தமான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ககோரி புரட்சியாளர்களை கவுரவிக்கும் வகையில் டெல்லியில் ஊர்வலம் நடத்த சுசீலா திதியும் துர்கா தேவியும் முடிவுசெய்தனர். பேரணியில் கலந்துகொண்டவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை அறிவித்தது. சுசீலா திதியும், துர்கா தேவியும் உத்தரவையும் மீறி ஊர்வலத்தை வெற்றிகரமாக வழிநடத்தினர்.

கூகுளில் தப்பு தப்பா தேடாதீங்க... உதவி செய்ய வரும் 'கிராமர் செக்' வசதி! பயன்படுத்துவது எப்படி?

Independence Day 2023: The Forgotten Life Of Sushila Didi, Who Helped Bhagat Singh In Hiding

மறைவு

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது (1942) அவரும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சுசீலா திதி இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பழைய டெல்லிக்கு குடிபெயர்ந்து தலித் பெண்களுக்கு சிறிய அளவிலான கைவினைத் திறன்களைக் கற்றுக்கொடுக்கும் பணியில் ஈடுபட்டார். டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனவரி 13, 1963இல் சுசீலா திதி இறந்தார். பழைய டெல்லியில் உள்ள காரி பாயோலிக்கு அருகில் அமைந்துள்ள சுசீலா மோகன் மார்க் சுசீலா திதியின் பெயரால் அழைக்கப்படுகிறது.

6.4 லட்சம் கிராமங்களுக்கு ஹை-ஸ்பீடு இன்டர்நெட் வசதி! பாரத்நெட் திட்டத்துக்கு ரூ.1.39 லட்சம் கோடி ஒதுக்கீடு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios