Asianet News TamilAsianet News Tamil

"பட்ஜெட்டில் விலை குறையும் பொருள் எவை? விலை அதிகமாகும் பொருள் எவை?" - இதை படிங்க...!!!

parliament budget-session-rkt592
Author
First Published Feb 1, 2017, 5:15 PM IST


சிகரெட், புகையிலை உயரும்

சிகரெட்டுக்கு வரி உயர்வு, பான் மசாலா, குட்கா பொருட்களுக்கு 9 முதல் 12 சதவீதம் வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால். புகையிலை, சிகரெட், பான்மசலா, சுருட்டு வகைகள், பீடி, சுவைக்கும் புகையிலை உயரும்

எல்.இ.டி. பல்பு

எல்.இ.டி பல்புகளின் உதிரி பாகங்களுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளதால், அவற்றின் விலை ஏப்ரல் மாதத்தில் இருந்து உயரும்

முந்திரி பருப்பு

முந்திரி பருப்பு வகைகள், பேக்கிங் செய்யப்பட்ட வறுத்த முந்திரி பருப்பு வகைகள் விலை அதிகரிக்கும்.

parliament budget-session-rkt592

குக்கர், நான்ஸ்டிக் தவா

அலுமினியம் அது சார்ந்த மூலப் பொருட்களுக்கு வரி 30 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆதலால், அலுமினியப் பொருட்கள், குக்கர், நான்ஸ்டிக் தவா, அலுமினிய கதவுகள், அலுமினிய மோட்டார் பாகங்கள் உள்ளிட்டவைகள் விலை அதிகரிக்கும்.

ேகபிள்

கண்ணாடி இழை கேபில் தயாரிக்க பயன்படும் பாலிமர் டேப் உள்ளிட்ட பொருட்களுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளதால் விலை உயரும்.

வெள்ளிப் பொருட்கள்

வெள்ளியின் இறக்குமதியின் கட்டுப்படுத்தும் விதமாக, வெள்ளி நாணயங்கள், பதக்கங்களுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளதால், அவற்றின் விலை உயரும், வெள்ளிப் பொருட்களின் விலையும் உயரும்.

parliament budget-session-rkt592

ஸ்மார்ட்போன், செல்போன்

செல்போன் தயாரிக்க பயன்படும் பிரின்ட் செய்யப்பட்ட சர்கியூட் போர்டுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஆதலால், ஏப்ரல் மாதத்துக்கு பின் செல்போன்கள், ஸ்மார்ட்போன்கள் விலை உயரும். ஆதலால், இப்போதே ஸ்மார்ட்போன் வாங்குபவர்கள் வாங்கிக்கொள்வது உத்தமம்.


விலை குறையும் பொருட்கள்
1. ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு
2. வீடுகளுக்கு பயன்படுத்தும் எல்.என்.ஜி. கியாஸ்(இயற்கை எரிவாயு)
3. சோலர் பேனல்களில் பயன்படுத்தும், சோலார் கடினதன்மை கண்ணாடிகள்.
4. மின் உற்பத்திக்கான பேட்டரிகள்
5. காற்றாலைகளில் பயன்படுத்தப்படும் ஜெனரேட்டர்.
6. தோல் பொருட்கள் தயாரிப்பில் தாவரங்களையும் பயன்படுத்துதல்.
7. வர்த்தகத்துக்கான ஸ்வைப்பிங் மெஷின்
8. ஆதார் அடிப்படையிலான பணப்பரிமாற்றம் செய்யப்பயன்படும் கைரேகை பதிவு செய்யும் எந்திரம்
9. பாதுகாப்பு படையில் பணியாற்றுவோருக்கு காப்பீடு

Follow Us:
Download App:
  • android
  • ios