கடும் நிதி நெருக்கடியில் பாகிஸ்தான்… தப்பிக்க அந்நாடு எடுத்த அதிரடி முடிவு என்னனு தெரியுமா?
நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அரசின் சொத்துக்கள் விற்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அரசின் சொத்துக்கள் விற்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் அரசு தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. மேலும் பணப்பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. இதை அடுத்து அரசின் சில சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று நிதி நிலையை சீர் செய்யும் அவசர சட்டத்திற்கு பாகிஸ்தான் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில், நாட்டில் பண வீக்கம் மக்களின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டுக் கடன் உச்ச நிலையை எட்டியுள்ளது.
இதையும் படிங்க: குரங்கு அம்மை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார மையம் பிரகடனம்!!
இத்தகைய சூழ்நிலையை சமாளிக்க, ஷாபாஸ் ஷெரீப் அரசு, நாட்டின் தேசிய சொத்துக்களை மட்டும் விற்க முடிவு செய்துள்ளது. தேசிய சொத்துக்களை விற்று வெளிநாட்டு கடனை அடைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான அவசரச் சட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசின் இந்த முடிவு பாகிஸ்தான் ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. கடனைக் அடைக்கும் வகையில் அரசாங்க சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: இலங்கை அதிபர் மாளிகை, பிரதமர் இல்லத்தில் இருந்து கலைப்பொருட்கள் மாயம்!!
நிதி நெருக்கடியை தவிர்க்கவே அரசு இவ்வாறு செய்வதாக கூறப்படுகிறது. தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதற்கான அனைத்து ஆயத்தங்களையும் பாகிஸ்தான் அரசு முடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அரசாங்கத்தின் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஐக்கிய அரபு எமிரேட்ஸிடம் வாங்கிய கடனை அடைக்க பாகிஸ்தான் அரசாங்கம் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு நிறுவனங்களை 2 முதல் 2.5 பில்லியன் டாலர்களுக்கு விற்கப் போவதாக கூறப்படுகிறது.