இலங்கை அதிபர் மாளிகை, பிரதமர் இல்லத்தில் இருந்து கலைப்பொருட்கள் மாயம்!!
இலங்கையில் அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் இல்லத்தில் இருந்து விலை உயர்ந்த 1000த்துக்கும் மேற்பட்ட கலை நயமிக்க பொருட்களை காணவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள சிறப்பு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் இல்லத்தில் இருந்து விலை உயர்ந்த கலை நயமிக்க பொருட்களை காணவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே இருவரையும் ராஜினாமாசெய்யுமாறு வலியுறுத்தி போராட்டக்காரர்கள் கடந்த 9ஆம் தேதி அதிபர் மாளிகை மற்றும் பிரதமரின் வீட்டினுள் பகிரங்கமாக நுழைந்தனர். பிரதமராக இருந்த ரணில் வீட்டுக்கு தீ வைத்தனர்.
அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கு சமைத்து சாப்பிடுவது, அங்கிருந்த அதிபரின் மெத்தையில் படுத்து புகைப்படம் எடுப்பது, நீச்சல் குளத்தில் நீராடுவது என்று தங்களது ஆசைகளை தீர்த்துக் கொண்டனர். இத்துடன் அதிரடியாக ரணில் விக்கிரமசிங்கேவின் இல்லத்திற்கு தீ வைத்தனர். அவரது வீட்டின் பின்புறம் சமையல் செய்து சாப்பிட்ட போராட்டக்காரர்கள் அங்கேயே தங்கினர்.
இலங்கையில் தொடரும் பதற்றம்; நாய் ஆக இருக்க விரும்பவில்லை எனக் கூறி கடற்படையில் 2 பேர் ராஜினாமா!!
இது உலக அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்து இருந்தது. இந்த நிலையில், இலங்கையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. கோத்தபய ராஜினாமா செய்துள்ளார். ரணில் விக்ரமசிங்கேவும் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால், ராஜபக்சே குடும்பத்தின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்கே அதிபராகி இருக்கிறார். அதே கட்சியைச் சேர்ந்த ராஜபக்சே குடும்பத்தினருக்கு நெருக்கமான தினேஷ் குணவர்தன பிரதமராக பொறுப்பேற்று இருக்கிறார்.
இவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மீண்டும் நேற்று முதல் போராட்டக்காரர்கள் போராடி வருகின்றனர். இவர்களது போராட்டத்தை அடக்குவதற்கு முப்படைகளும் களத்தில் இறக்கப்பட்டுள்ளன. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முப்படைகளுக்கும் ரணில் பகிரங்க உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். நேற்று முன்தினம் இரவு, அதிபர் அலுலகவம் இருக்கும் கல்லி பேஸ் பகுதியில் குழுமிருந்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் ஒன்பது பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த அதிபர் மற்றும் பிரதமரின் இல்லங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்த கலைநயம்மிக்க 1000த்துக்கும் மேற்பட்ட பொருட்களை காணவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
china bank crisis: சீனா அரசு வங்கிகள் திவாலா? மக்களைப் பணம் எடுக்க விடாமல் டாங்கிகள் நிறுத்தம்
ஆனால், அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களில் இருந்த பொருட்கள் என்னவென்ன என்பது குறித்து தங்களுக்கு தெரியாது என்று இலங்கை தொல்பொருள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான பதிவுகள் எதுவும் இந்தத் துறையில் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
அமைதியான வழியில் போராடுவதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால், போராட்டக்காரர்கள் மீண்டும் அதிபர், பிரதமர் இல்லங்கள் மற்றும் அலுவகங்களை ஆக்ரமிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அதிபர் ரணில் தெரிவித்துள்ளார்.