Asianet News TamilAsianet News Tamil

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பாகிஸ்தான் இளைஞர் இந்தியாவை புகழ்ந்து சிலாகிக்க இதுதான் காரணமா?

Pakistani youth viral video: ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பாகிஸ்தான் இளைஞர் ஒருவர் இந்தியாவை புகழ்ந்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

Pakistani youth in Australia lauds India Heres why
Author
First Published May 26, 2023, 4:21 PM IST

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பாகிஸ்தான் இளைஞர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அதில், ஆஸ்திரேலியாவில் உள்ள பிரபலமான இடத்தில் இந்தியக் கொடியைப் பார்த்த இளைஞர் தன் சொந்த நாடான பாகிஸ்தான் மீது கேள்வி எழுப்புவதைக் காணலாம். 

ஆஸ்திரேலியாவில் இந்திய கொடியை கண்டு உணர்ச்சிவயப்பட்ட பாகிஸ்தான் இளைஞர் அந்த வீடியோவில் பேசியுள்ளதாவது:" ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ், இந்திய பிரதமர் மோடியை 'பாஸ்' என்று அழைக்கிறார். தன் நாட்டை இந்தியாவுடன் ஒப்பிடுகிறார். ஆனால் இந்தியாவை பாருங்கள். இந்தியா எங்கே இருக்கிறது, பாகிஸ்தான் எங்கே இருக்கிறது என்று பாகிஸ்தான் நாட்டு தலைவர்கள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளே பாருங்கள்"என பேசியுள்ளார். 

இந்த வீடியோ @inaya_bhat என்ற ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதுவரை 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. இதில் கலவையான கருத்துக்கள் பதிவிடப்பட்டுள்ளன. அதில் ஒருவர், "நீங்கள் ஒருபோதும் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒப்பிட முடியாது. பாகிஸ்தானியரின் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. அதேசமயம் இந்தியா ஒவ்வொரு நாளும் சக்தி வாய்ந்ததாக மாறி வருகிறது."எனக் குறிப்பிட்டுள்ளார். 

மே 23ஆம் தேதி அன்று, ஆஸ்திரேலிய உயர்மட்ட நிறுவனங்களின் வணிகத் தலைவர்களைச் சந்தித்த பிரதமர், தொழில்நுட்பம், திறன் போன்ற துறைகளில் இந்தியத் தொழில்துறையுடன் ஒத்துழைப்பை மேம்படுத்த அழைப்பு விடுத்தார். கடந்த 22ஆம் தேதி பிரதமர் மோடி தனது மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் போது கடைசியாக ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு வந்தார். ஆஸ்திரேலிய அரசின் விருந்தினராக பிரதமர் மோடி அங்கு சென்றார். ஹான்காக் ப்ராஸ்பெக்டிங் எக்ஸிகியூட்டிவ் சேர்மன் ஜினா ரைன்ஹார்ட், ஃபோர்டெஸ்க்யூ ஃபியூச்சர் இண்டஸ்ட்ரி எக்ஸிகியூட்டிவ் சேர்மன் ஆண்ட்ரூ ஃபாரஸ்ட் மற்றும் ஆஸ்திரேலிய சூப்பர் சிஇஓ பால் ஷ்ரோடர் ஆகியோருடன் மோடி சந்திப்புகளை நடத்தினார். 

இதையும் படிங்க: தினமும் உள்ளங்கையில் இப்படி 2 நிமிடங்கள் செய்தால் போதும்!! தீராத ஒற்றை தலைவலி கூட குறையும்..

கடந்த 2000ஆம் ஆண்டு ஏப்ரல், 2022ஆம் ஆண்டு டிசம்பர் 2022இல், அரசாங்கத் தரவுகளின்படி, ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா 1.07 பில்லியன் டாலர் முதலீடுகளைப் பெற்றது. இரு நாடுகளும் ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி இடைக்கால தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை அமல்படுத்தியுள்ளன. இரு நாடுகளும் இப்போது அந்த ஒப்பந்தத்தின் நோக்கத்தை ஒரு விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தமாக (CECA) விரிவுபடுத்துவதில் ஈடுபட்டுள்ளன. 

இதையும் படிங்க: கொரோனாவை விட கொடிய ஜாம்பி வைரஸா 'Disease X'? உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கையின் பின்னணி என்ன?

ஆஸ்திரேலியா 2022-23ல் இந்தியாவின் 13வது பெரிய வர்த்தக கூட்டாளராக இருந்தது. இந்தியா தங்கம், கொண்டைக்கடலை ஆகியவற்றுக்கு ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாகவும், நிலக்கரி, செப்பு தாதுக்களுக்கான இரண்டாவது பெரிய சந்தையாகவும், ஈயம் மற்றும் கம்பளிக்கான மூன்றாவது பெரிய சந்தையாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios