Asianet News TamilAsianet News Tamil

குழந்தைகளை வைத்து தாக்குதல் நடத்தும் பாக். தீவிரவாத அமைப்பு : ஐ.நா. அதிர்ச்சி

Pakistani children recruited for suicide attacks U.N. report
Pakistani children recruited for suicide attacks: U.N. report
Author
First Published Jun 29, 2018, 12:51 PM IST


தீவிரவாதிகள் குறித்து ஐ.நா. அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தற்கொலைப்படை தாக்குதலை நடத்துவதற்காகவே பாகிஸ்தானிய குழந்தைகளை தீவிரவாத அமைப்புகள் தேர்ந்தெடுப்பதாக ஐக்கிய நாடுகள்  சபை கவலை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை 2017-ம் ஆண்டு ஜனவரி - டிசம்பர் வரையிலான காலத்தில் நடந்த  உள்நாட்டுச் சண்டை மற்றும் ஆயுத மோதல்களால் பலியான, சிறுவர் - சிறுமியர் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தற்கொலை படை தாக்குதல்களை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பான வீடியோக்களை  பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் வெளியிட்டுள்ளன. Pakistani children recruited for suicide attacks: U.N. report

இந்தியாவின் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், 2017-ம் ஆண்டு பாதுகாப்பு படையினருக்கு எதிராக தாக்குதல் நடத்த, பாகிஸ்தானைச் சேர்ந்த, ஜெய்ஷ் - இ - முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்பினர், காஷ்மீர் மாநில சிறுவர் - சிறுமியரை பயன்படுத்தினர். குறிப்பாக மதரசா உள்ளிட்ட  இடங்களில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை தீவிரவாத அமைப்புகள் தற்கொலை தாக்குதல்களுக்கு பயன்படுத்துகின்றன. Pakistani children recruited for suicide attacks: U.N. report

 கடந்த ஆண்டு  பிப்ரவரியில் சிந்து மாகாணத்தின் சேவான் பகுதியில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் 20 குழந்தைகள் உள்பட 75 பேர்  கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பள்ளிக்கூடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட  8 தாக்குதல்களில், 4 தாக்குதல்கள் பெண் கல்வியை எதிர்த்து  நடத்தப்பட்டுள்ளன. 

Pakistani children recruited for suicide attacks: U.N. report

அதேபோல் கடந்தாண்டில், 21,000 வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதில், ஈராக், மியான்மர், சிரியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில் மட்டும், 10,000 சிறுவர் - சிறுமியர் உயிரிழந்தனர். தெற்கு ஆப்ரிக்க நாடான, நைஜீரி யாவில், 450-க்கும் மேற்பட்ட சிறுவர் - சிறுமியரை, மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தி உள்ளனர். என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios