மோடியை தட்டிக்கேட்க ஆள் இல்லையா...! மீண்டும் ஐநாவிற்கு பாகிஸ்தான் கடிதம்... சர்வதேச அரங்கில் நீலிக்கண்ணீர்...!
காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்ற வகையில் இந்தியாவின் நடவடிக்கைகள் இருப்பதாகவும், கூறியநுள்ள குரேஷி, இந்தியாவின் இந்த எதேச்சதிகார நடவடிக்கையை சர்வதேச நாடுகளும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலும்தான் தட்டிக்கேட்ட வேண்டும், உடனே ஐநா இதில் தலையிடும் என்று நம்புகிறோம் என்று ஐநாமன்றத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் அத்துமீறங்களை தட்டிக்கேட்க யாரும் இல்லையா..? என மீண்டும் பாகிஸ்தான், ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு கடிதம் எழுதி நீலிக்கண்ணீர் வடித்துள்ளது.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டு காஷ்மீர் , லடாக் என இரண்டாக பிரித்து அதை யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. காஷ்மீரை முழுவதுமாக இந்தியா நாட்டுடமை ஆக்கிக்கொண்டதை தாங்கிக்கொள்ள முடியாத பாகிஸ்தான், இந்தியா செய்வது நியாமா, நேர்மையா, என்று சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்க, கத்தி கூப்பாடுபோட்டு வருகிறது. சீனாவின் ஆதரவுடன் ஏற்கனவே இந்தியா மீது ஐநா மன்றத்தில் புகார் கொடுத்து சர்வதேச பிரச்சனையாக மாற்ற முயற்ச்சி செய்து அதில் தோல்வியடைந்தது பாகிஸ்தான். பின்னர் அமெரிக்காவின் உதவியை நாடிய நிலையில் அந்த முயற்ச்சியும் பலனளிக்க வில்லை, இந்த நிலையில் ரஷ்யா, மற்றம் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவு அளித்துள்ளன.
இத்தனை முயற்ச்சிகளுக்குப்பின்னும் இந்தியாவை ஏதும் செய்ய முடியவில்லையே என்ற விரக்தியில் உள்ள பாகிஸ்தான். மீண்டும் இந்தியாவின் மீது ஐநா மன்றத்தில் புகார் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் வெளியிறவுத்துறை அமைச்சர் குரேஷி ஐநா மனித உரிமை ஆணையருக்கு கடந்த 4 ஆம் தேதி கடிதம் எழுதி இருந்த நிலையில், கடந்த 8 ஆம் தேதி தொலைபேசியிலும் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் ஐ.நா. மனித உரிமை ஆணையர் மிஷேல் பாச்லெட்டுக்கு குரேஷி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்தியா காஷ்மீரில் எடுத்துள்ள நடவடிக்கைகள் ஐ.நா.வின் தனியுரிமை,மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம், சர்வதேச சட்டம் மற்றும் இந்தியாவின் சொந்த வாக்குறுதிகளையும் அப்பட்டமாக மீறியுள்ளது என்றும், இதை பாகிஸ்தான் பலமுறை கண்டித்தும் இந்தியாவிடம் இருந்து முறையான பதில் இல்லை என்றும் குரேஷி புகார் கூறியுள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்ற வகையில் இந்தியாவின் நடவடிக்கைகள் இருப்பதாகவும், கூறியுள்ள குரேஷி, இந்தியாவின் இந்த எதேச்சதிகார நடவடிக்கையை சர்வதேச நாடுகளும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலும்தான் தட்டிக்கேட்ட வேண்டும், உடனே ஐநா இதில் தலையிடும் என்று நம்புகிறோம் என்று ஐநாமன்றத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது.