பாகிஸ்தான் மக்களை குஷிப்படுத்திய இம்ரான் கான்... பிரதமர் மோடி சார் இதையும் கொஞ்சம் கவனியுங்க..!

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மக்கள் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் மீது அதிருப்தியில் இருந்தாலும் அவர்களை குஷிப்படுத்தி இருக்கிறார்.
 

Pakistan to slash petrol prices by Rs 459 per litre

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மக்கள் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் மீது அதிருப்தியில் இருந்தாலும் அவர்களை குஷிப்படுத்தி இருக்கிறார்.Pakistan to slash petrol prices by Rs 459 per litre

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலைச்சரிவின் பலன்கள் மக்களை சென்று சேரும் வகையில் பெட்ரோல், டீசல், மண்எண்ணை விலையை 5 ரூபாய் வரை குறைக்க பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளது. பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் நிலையில் இந்த விலைச்சரிவின் பலன்கள் மக்களை சென்று சேரும் வகையில் பெட்ரோல், டீசல், மண்எண்ணெய் விலையை 5 ரூபாய் வரை குறைக்க இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளது.

Pakistan to slash petrol prices by Rs 459 per litre
 
இதற்கான அறிவிப்பை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு செய்தி தொடர்பாளர் பிர்தவுஸ் ஆஷிக் அவான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான ‘புதிய பாகிஸ்தான்’  அரசு தனது இரண்டாம் ஆண்டில் பயணிக்கும் இவ்வேளையில் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.Pakistan to slash petrol prices by Rs 459 per litre

அவ்வகையில், நாளையில் இருந்து பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.4.59 குறைக்கப்படும். உயர்ரக டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு  ரூ.7.67 குறைக்கப்படும். மண்எண்ணை விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.4.27 குறைக்கப்படும். இலகுரக டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.5.63 குறைக்கப்படும் என பாகிஸ்தான் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. அண்டை நாடான இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios