காஷ்மீர் விவகாரம்... இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு..!
இந்தியாவுக்கான தூதரை திரும்ப அழைக்க பாகிஸ்தான் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவுக்கான தூதரை திரும்ப அழைக்க பாகிஸ்தான் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இரு நாட்டு எல்லைகளிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு நாட்டு தூதரகங்களுக்கு முன் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தியாவுக்கான தூதர் பாகிஸ்தானின் உள்ள நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளது. இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் ஆகஸ்ட் 16ம் தேதி பதவியேற்க உள்ள நிலையில் அந்நாடு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த முடிவை பாகிஸ்தான் எடுத்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மேலும் பாதுகாப்பை அதிகரிக்க இந்தியாவிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் இந்தியாவுக்கான தூதரை திரும்ப அழைக்க பரிசீலித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன.