பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... சல்லி சல்லியான சாலை... 5 பேர் உயிரிழந்த பரிதாபம்..!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3-ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் கூறுகையில் பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகருக்கு வடகிழக்கே 173 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோளில் 6.1-ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கின. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியது. இதன் ஆழம் 10 கிமீ. இந்த நிலநடுக்கம் 8 முதல் 10 நொடிகள்வரை நீடித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். மேலும், பல நகரங்களில் கட்டிடங்கள், சாலைகள் சேதமடைந்துள்ளன. இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது. காஷ்மீர், பஞ்சாப், டெல்லி மற்றும் வட இந்திய மாநிலங்களின் பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.