Asianet News TamilAsianet News Tamil

Petrol Price in Pakistan:பாகிஸ்தான் மக்களுக்கு அதிர்ச்சி! பெட்ரோல், டீசல், கேஸ் விலை வரலாற்று உயர்வு

Petrol Price in Pakistan: பாகிஸ்தான் ஏற்கெனவே கடும் பொருளாதாரச் சிக்கலில் தவித்து வரும்நிலையில் நேற்று இரவு தூங்கி எழுந்த மக்களுக்கு இன்று காலை பேரதிர்ச்சி காத்திருந்தது. பெட்ரோல், டீசல் விலையை அரசு வரலாறு காணாத அளவு உயர்த்தியுள்ளது.

Pakistan raises petrol, Diesel, Gas prices to an all-time high: People affected by inflation
Author
First Published Feb 16, 2023, 11:50 AM IST

பாகிஸ்தான் ஏற்கெனவே கடும் பொருளாதாரச் சிக்கலில் தவித்து வரும்நிலையில் நேற்று தூங்கி எழுந்த மக்களுக்கு இன்று காலை பேரதிர்ச்சி காத்திருந்தது. பெட்ரோல், டீசல், சமையஸ் கேஸ் விலையை அரசு வரலாறு காணாத அளவு உயர்த்தியுள்ளது.

பாகிஸ்தான் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. அந்நியச் செலாவணி கையிருப்பு சில மாதங்களுக்கு மட்டுமேஇருப்பதால், கடனுக்காக வட்டிக்கு செலவிடுதா அல்லது இறக்குமதிக்கு செலவிடுவதா எனத் தெரியாமல் அரசு திண்டாடுகிறது. 

Pakistan raises petrol, Diesel, Gas prices to an all-time high: People affected by inflation

பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளதாரம்! பால் லிட்டர் ரூ.210, கோழி இறைச்சி கிலோ ரூ.800!

இதையடுத்து, கடனிலிருந்து மீள்வதற்கு சர்வதேச செலவாணி நிதியம், உலக வங்கி உதவியை பாகிஸ்தான் அரசு நாடியது. ஆனால், அங்கிருந்து கடனுதவி கிடைப்பதில் தாமதம் நீடிக்கிறது. இதனால், நாளுக்கு நாள்  பொருளாதாரச்சிக்கல், விலைவாசி உயர்வு, மக்களை வாட்டி வதைத்து வருகிறது. 

உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களான பால், அது சார்ந்த பொருட்கள், இறைச்சி, கோழி இறைச்சி ஆகியவற்றின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்துவிட்டது. பால் ஒருலிட்டர் ரூ.210க்கு விற்கப்படுகிறது, கோழி இறைச்சி ஒரு கிலோ ரூ.800 வரை உயர்ந்துவிட்டது.

இந்த விலைவாசி உயர்வை தாங்க முடியாமல் மக்கள் தவித்து வரும்நிலையில் நேற்று இரவு மக்கள் மீது பெரிய சுமையை பாகிஸ்தான் அரசு இறக்கியுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலையை அதிரடியாகஉயர்த்திமக்களை கதற வைத்துள்ளது.

அது மட்டுமல்லால் புதிய வரியையும் மக்கள் மீது சுமத்தியுள்ளது பாகிஸ்தான் அரசு. பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு, புதிய வரிவிதிப்பால் ரூ.17000 கோடியை திரட்ட அரசு திட்டமிட்டு நேற்று இரவு அறிவித்துள்ளது.

Pakistan raises petrol, Diesel, Gas prices to an all-time high: People affected by inflation

பிரெஷா கேட்டதுக்கு இப்படியா? ஹோட்டலில் சாப்பிடும்போது தட்டில் உயிரோடு துள்ளிய மீன்...!

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.22.20 உயர்த்தப்பட்டு, ரூ.272 ஆக அதிகரித்துள்ளது. ஹை-ஸ்பீடு டீசல் விலை லிட்டருக்கு ரூ.17.20 உயர்த்தப்பட்டுள்ளது, மண்எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.12.90 அதிகரித்துள்ளது.

லைட் டீசல் விலை லிட்டருக்கு ரூ.9.68 ஆக உயர்ந்து லிட்டர் ரூ.280ஆக அதிகரித்துள்ளது. மண்எண்ணெய் விலை லிட்டர் ரூ.202.73 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிராக பாகிஸ்தான் கரன்சி மதிப்பு மோசமாக வீழ்ச்சி அடைந்துவிட்டதால், பணத்தின் மதிப்பு குறைந்து, பணவீக்கம் அதிகரித்துள்ளது. 

Petrol Price in Pakistan: சர்வதேச செலவாணி நிதியம், கடனுதவி தருவதற்கு பாகிஸ்தானுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் முக்கியமானது பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் மானியத்தை ரத்து செய்ய வேண்டும், புதிய வரிவிதிப்பை விதிக்க வேண்டும் என்பதாகும். ஐஎம்எப் கடனைப் பெறும் நோக்கில் மக்கள் மீது புதியவரியை பாகிஸ்தான் அரசு விதித்துள்ளது.

 கடந்த மாதம் 31ம் தேதி முதல் பிப்ரவரி 9ம் தேதிவரை பாகிஸ்தான் அதிகாரிகளுடன் சர்வதேச செலாவணி நிதிய அதிகாரிகள் பலகட்டப் பேச்சு நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் தற்போது காணொலி மூலம் மீண்டும் பேச்சு நடந்து வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios