பிரெஷா கேட்டதுக்கு இப்படியா? ஹோட்டலில் சாப்பிடும்போது தட்டில் உயிரோடு துள்ளிய மீன்...!
உணவகத்தில் பரிமாறிய மீன் உயிருடன் துள்ளிய சம்பவம் ஜப்பானில் நடந்துள்ளது.
சமைத்து பரிமாறும் உணவில் காய்கறிகள் சரியாக வெந்து போகாமல் இருப்பதை பார்த்திருப்பீர்கள். அசைவ உணவுகள் அரைகுறையாக வேக வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் ஜப்பானில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது தட்டில் இருந்த மீன் துள்ளிய சம்பவம் திகைக்க வைத்துள்ளது.
இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில், உணவகத்தில் பரிமாறப்பட்ட மீன், உயிருடன் துள்ளி வந்து வாடிக்கையாளர்களின் சாப்ஸ்டிக்கை கவ்வி பிடிக்கிறது. இது காண்போரை திகைக்க வைக்கிறது. இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகிவருகிறது. ஜப்பானிய உணவகத்தில் வாடிக்கையாளருக்கு மீனும், சாலட்டும் வழங்கப்படுகிறது. அப்போது மீன் அவர் கையில் இருந்த சாப்ஸ்டிக்கை கவ்வி பிடித்து தொங்குகிறது. முதலில் இந்த வீடியோ கடந்தாண்டு பிப்ரவரியில் தகாஹிரோ என்பவரால் வெளியிடப்பட்டது.
அதில், "உணவகத்தில் பரிமாறப்படும் மீன் சாப்ஸ்டிக் கடிக்கிறது" என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ மீண்டும் பதிவு செய்யப்பட்டதிலிருந்து, கிட்டத்தட்ட 9.5 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இதில் 71.2k விருப்பக்குறிகளையும் வாங்கியுள்ளது.
வீடியோவைப் பார்த்த பிறகு பலர் விதவிதமான கமெண்ட்டுகளை பகிர்ந்து வருகின்றனர். உண்ணுவதற்கு முன்பு மீன் துள்ளி வருவது நம்பமுடியாத ஆபத்தானதாக தோன்றுகிறது என தெரிவித்துள்ள ஒருவர், "20 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் தொழிலில் இருக்கிறேன். இதில் பொறுப்பு மற்றும் ஆபத்து அதிகம். உங்கள் உணவு நன்கு சமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்"எனக் கூறியுள்ளார்.
கெட்டு போன மீன், கெடாத மீன் கண்டறிவது எப்படி?
மீன் நல்ல பிரெஷா இருந்தால் செவுள்களை நிமிர்த்தி பார்த்து அறியலாம். அப்போது செவுள்கள் ரத்த வண்ணமாக இருந்தால் நல்ல மீன். வெளிரிய நிறமாக இருந்தால் அது கெட்டுப்போன மீன் ஆகும். ஆனால் பார்மலின் மாதிரியாம ரசாயனங்கள் பூசிய மீன்களின் செவுள்களும் ரத்த நிறத்தில்தான் காணப்படும். ஆனால் செவுளைப் பிளந்து அங்கு தொடும்போது கைகளில் பிசின் மாதிரி கூழ்மமாக இருந்தால் அது பிரெஷ் மீன்.
மீனின் தலைப் பகுதியை நாம் கைகளால் தூக்கி பார்க்கும்போது வால்பகுதி கீழே தொய்ந்து தொங்கினால் யோசிக்கவே வேண்டாம் அது கெட்டுப்போனது. நல்ல கெடாத மீன் எனில் அதம் தலைப்பகுதியைத் தூக்கும்போது வால் பகுதி விரைப்பாக இருக்கும்.
இதையும் படிங்க: viral video: 3000 அடி உயரம்.. முரசு போன்ற மலையில் வீற்றிருக்கும் விநாயகர்.. தில்லாக பூசாரி செய்யும் காரியம்