தலைமை மருத்துவமனை அருகே தற்கொலை படை தாக்குதல்... 3 பேர் உடல் சிதறி உயிரிழப்பு..!
பாகிஸ்தானில் தலைமை மருத்துவமனை அருகே தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில் தேரா இஸ்மாயில் கான் தலைமை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் அருகே இன்று தீவிரவாதிகள் திடீரென தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக தகவலறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதலை அடுத்து அங்கு பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.