சட்டப் பிரிவு 370 ரத்து ! இன்னொரு புல்வாமா தாக்குதல் நடக்கும் !! இன்ரான்கான் எச்சரிக்கை !!
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் இன்னொரு புல்வாமா தாக்குதல் ஏற்படலாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எச்சரித்துள்ளார்.
அரசியல் சாசன சட்டப்பிரிவு 370ஐ நீக்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் பேசும் போது, இந்திய அரசு எடுத்துள்ள முடிவு திடீரென எடுக்கப்பட்டதல்ல. இது அவர்களின் தேர்தல் வாக்குறுதி. இந்த முடிவு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர்களின் ‘இந்தியா இந்துக்களுக்கான நாடு’ என்ற சித்தாந்தத்தின் அடிப்படையிலானது என குறிப்பிட்டார்..
இஸ்லாமியர்கள் இந்தியாவை 500-600 ஆண்டுகள் ஆட்சி செய்ததால் அவர்கள் இஸ்லாமியர்களை வெறுக்கின்றனர். பிரிட்டிஷ் காரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியதும் இஸ்லாமியர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்த வேண்டுமென்பதே அவர்களது விருப்பம்.
இந்து-இஸ்லாமிய ஒற்றுமைக்காக ஒருகாலத்தில் முகமது அலி ஜின்னா வாதாடினார். ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கைகளை அறிந்தபின் இந்தியாவில் இஸ்லாமியர்கள் இருந்தால் அவர்கள் தவறாக நடத்தப்படுவர் என்று புரிந்துகொண்டார்.
பாகிஸ்தான் உருவாகியிருக்கவே கூடாது என்று என்னிடம் சொன்ன காஷ்மீர் தலைவர்கள் இப்போது ஜின்னாவின் கருத்து சரிதான் என்று ஒப்புக்கொள்கின்றனர். இந்துக்களுக்கே முன்னுரிமை என்ற இனவாத கொள்கை அடிப்படையில் இந்தியா கட்டமைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிலோ எல்லா மனிதர்களுக்கும் சம உரிமை அளிக்கப்படுகிறது. இறைச்சி சாப்பிடும் மக்களை படுகொலை செய்வதுதான் பாஜகவின் சித்தாந்தம். பாஜக இனவாத சித்தாந்தம் கொண்டது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் இன்னொரு புல்வாமா தாக்குதல் ஏற்படலாம். பாகிஸ்தானுக்கும் புல்வாமா தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மோடி அரசின் முடிவால் காஷ்மீர் மக்களை நசுக்க முடியாது. இவ்விவகாரத்தில் நவீன மேற்கத்திய ஜனநாயக நாடுகள் தலையிட வேண்டும். இந்தப் பிரச்சினையை பாகிஸ்தான் அரசு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவிற்கு எடுத்துச் சென்று முறையிடும்” என்று தெரிவித்தார்.