அரியணை ஏறப்போவது யார்? குண்டு சத்தங்களுக்கு நடுவே நாளை பாகிஸ்தானில் வாக்குப்பதிவு!!!
பரபரப்பான அரசியல் சூழலில் பாகிஸ்தானில் நாளை பொதுத்தேர்தலை சந்திக்கிறது. பாகிஸ்தானில் நாடாளுமன்றத்திற்கும், 4 மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த தீவிர தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்தது. இதையடுத்து வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஊழல் ஆட்சியை ஏற்படுத்தும் புதிய தலைமைக்கு ஆதரவு அளிக்கப்போவதாக பாகிஸ்தான் வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தலில் பல்வேறு கட்சிகள் களத்தில் இருந்தாலும், ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக், பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ- இன்சாப் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பாகிஸ்தானில் யார் ஆட்சிக்கு வந்தாலும் கடும் நிதி நெருக்கடி உள்ளிட்ட சவால்கள் காத்திருக்கிறன. பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் 3675 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது பல்வேறு இடங்களில் நடைபெற்ற தற்கொலைப்படைத் தாக்குதல்களில் 3 வேட்பாளர்கள் உட்பட 160 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து தேர்தலின் பொது அசம்பாவிதங்களை தடுக்க வாக்குச்சாவடிகளில் பன் மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர் மற்றும் போலீசார் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 3 லட்சத்து 71 ஆயிரத்து 388 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் தேர்தல் வரலாற்றில் இவ்வளவு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பது இதுதான் முதல் முறை. ஆங்காங்கே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என கருதி முக்கிய பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.