சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறுவது ஒரு 'போர் நடவடிக்கை' என்று ஐநாவில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் குற்றம்சாட்டினார். இந்தியா மீது பல்வேறு பொய் கட்டுக்கதைகளை அவர் அவிழ்த்து விட்டார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்தியாவின் முப்படைகளும் இணைந்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் 9 முகாம்களை ஏவுகணை மூலம் தாக்கி அழித்தனர். இதில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தியா-பாகிஸ்தான் போர்
இதனைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் இந்தியாவின் எல்லையோர மாநிலங்களை ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்தது. இதனால் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவம் அங்குளள ஏராளமான விமானப்படைத் தளங்களை தாக்கியது. பாகிஸ்தானின் ட்ரோன்கள், விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இதன்பிறகு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலையீட்டின் பேரில் இந்தியா பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்தது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறுவது போர் நடவடிக்கை
முன்னதாக பாகிஸ்தான் மீதான அனைத்து தொடர்புகளையும் இந்தியா துண்டித்தது. மேலும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் ரத்து செய்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் போர் குறித்து ஐநாவில் பேசியுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், இந்தியா தங்களுக்கு தண்ணீர் தர மறுப்பதாக புலம்பி தவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் (UNGA) உரையாற்றிய ஷெபாஸ் ஷெரீஃப், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறுவது ஒரு 'போர் நடவடிக்கை' ஆகும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்தியா மீது பொய் கூறிய ஷெபாஸ் ஷெரீஃப்
அத்துடன், இந்த ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர்நிறுத்தத்திற்கு உதவியதற்காக, இஸ்லாமாபாத், டொனால்ட் டிரம்ப்பை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்துள்ளதாக மீண்டும் வலியுறுத்தினார். இதே கருத்தை டிரம்ப் தொடர்ந்து கூறி வர, இந்தியா இதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. மேலும் கடந்த மே மாத நிகழ்வுகளைக் குறிப்பிட்ட ஷெபாஸ் ஷெரீஃப், இந்தியாவின் இராணுவ நடவடிக்கையை 'தூண்டுதல் இல்லாத ஆக்கிரமிப்பு' என்று தவறாக விவரித்தார்.
ஆபரேஷன் சிந்தூர்
உண்மையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டதற்குப் பிறகுதான், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது இந்தியாவால் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடங்கப்பட்டன. ஆனால் இந்த உண்மையை மறைத்து இந்தியா தங்கள் குடிமக்கள் மீது தாக்கியதாக ஐநாவில் முழுக்க முழுக்க பொய்க் கதைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்.
