பாகிஸ்தானில் ஏற்பட்ட அதி பயங்கரம்...!! பொதுமக்கள் கண்முன்னால் துடிதுடித்து இறந்த 11 பேர்...!!
பாகிஸ்தான் என்றாலே அடிக்கடி தீ விபத்து , உள்நாட்டு தீவிரவாதிகளால் ஆங்காங்கே குண்டு வெடிப்பு , துப்பாக்கிச்சூடு என துர் நிகழ்வுகள் நடப்பது வழக்கம் என்றாகி வருகிறது.
பாகிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சுமார் 11 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர் , வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது . பாகிஸ்தான் என்றாலே அடிக்கடி தீ விபத்து , உள்நாட்டு தீவிரவாதிகளால் ஆங்காங்கே குண்டு வெடிப்பு , துப்பாக்கிச்சூடு என துர் நிகழ்வுகள் நடப்பது வழக்கம் என்றாகி வருகிறது. எப்போதும் மனித ஓலம், ரத்தக்களறியாக என காட்சியளிக்கும் அனைத்துக்கும் அடிப்படையாக தீவிரவாதம் இருந்துவருகிறது.
இந்நிலையில் மேலும் ஒரு துயரச் சம்பவம் அங்கு நடந்துள்ளது , லாகூர் மாகாணத்தில் ஷாதரா என்ற பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தான் அது . அங்கு மிகப்பெரிய வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது . இன்று காலை வழக்கம்போல தொழிற்சாலை இயங்க தொடங்கியது . அதில் எப்போதும் போல பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர் . அப்போது வாசனை திரவியம் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்தது பின்னர் அங்கு ஏற்பட்ட தீப்பிழம்பு தொழிற்சாலையின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது .
பேரல்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த வாசனைத்திரவியங்களில் மளமளவென தீ பரவியது , தொழிற்சாலையில் நுழைவாயிலில் தீ அதிகமாக இருந்ததால் அதில் பணியாற்றிக்கொண்டிருந்த பணியாளர்கள் தொழிற்சாலையிலிருந்து வெளியேற முடியாமல் தீயில் சிக்கினார் . இதனையடுத்து தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயணைப்பு மீட்பு பணியில் ஈடுபட்டனர் . அதில் இந்த விபத்தில் சிக்கிய 2 பேரை மட்டும் அவர்கள் உயிருடன் மீட்டனர் , தொழிற்சாலையின் உட்பகுதியில் சிக்கிய பெண்கள் உட்பட 11 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர் . பாகிஸ்தானில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.