Asianet News Tamil

இம்ரான்கானை நையா பைசாவுக்கு மதிக்காத பாகிஸ்தானியர்கள்..!! அந்த வகையில நம்ம பிரதமர் மோடி கெத்துதான்..!!

பாகிஸ்தானில்  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் மத்தியகிழக்கு நாடுகளில் புனித யாத்திரை மேற்கொண்டு திரும்பியவர்கள் ஆவர், 

Pakistan peoples disobey curfew and they are assembling in mosque
Author
Delhi, First Published Apr 14, 2020, 11:46 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் பாகிஸ்தானில் தடை உத்தரவை மீறி ஆயிரக்கணக்கானோர் மசூதிகளில் கூடி தொழுகை நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர் .  இந்நிலையில் அவர்களை கலைக்க அரசு முயற்சி செய்தாலும் அவர்கள் வன்முறையில் ஈடுபடும் சூழல் அங்கு ஏற்பட்டுள்ளது.   இதனால் ஊரடங்கை நடைமுறைப்படுத்த முடியாத நிலையில்  இம்ரான்கான் அரசு  திகைத்து வருகிறது. இதனால் பாகிஸ்தானில் வைரஸ் கிருமி அதிக அளவில் பரவக்கூடிய ஆபாயம் ஏற்பட்டுள்ளது.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது .  இதுவரையில் உலக அளவில் 19,19,913 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது,  1,19,666 பேர் உயிரிழந்துள்ளனர்,  இந்நிலையில் பாகிஸ்தானில் 5,707 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .  இதுவரையில் 97 பேர் இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளனர் . அதே நேரத்தில் பாகிஸ்தானில் இந்த வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அங்கு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  குறிப்பாக  மக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்டறிந்து அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது . மசூதிகளில் தொழுகை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது ,  

ஆனாலும் அரசின் தடையை மீறி பாகிஸ்தான் மக்கள் மசூதிகளில் தொழுகையை ஈடுபட்டுவருகின்றனர் ,  இதுகுறித்து தெரிவிக்கும் அவர்கள் , மேற்கத்திய நாடுகளில் இந்த வைரஸ் வேகமாக பரவுகிறது .  அங்கு பரவுவது போல இது பாகிஸ்தானியர்களுக்கு பரவாது,  நாங்கள் நாளொன்றுக்கு ஐந்து முறை கைகளை கழுவுகிறோம்,  பிரார்த்தனை செய்ய  நாங்கள் ஐந்து முறை முகத்தை கழுவுகிறோம்.  எங்களுக்கு முகக் கவசங்கள் தேவையில்லை ,  நாங்கள் கடவுளை நம்பி இருக்கிறோம் ,  நாங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை  என தெரிவிக்கின்றனர்.  அதுமட்டுமின்றி ,  மதமும் பிரார்த்தனையும் பாகிஸ்தானில் பலருக்கு உணர்வுபூர்வமான பிரச்சனை அதை அரசாங்கம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும் என  தொழுகையில் கலந்து கொள்பவர்கள் தெரிவிக்கின்றனர் . அதாவது  200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பாகிஸ்தானில் இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர் .  இதனால் பிரார்த்தனை கூட்டங்களை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை .  

பாகிஸ்தானில்  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் மத்தியகிழக்கு நாடுகளில் புனித யாத்திரை மேற்கொண்டு திரும்பியவர்கள் ஆவர், மற்றும் மரபுவழி மதமாற்றம் செய்யும் அமைப்பான தப்லீக் ஜமாத்தில் தொடர்புடையவர்களுக்குமே வைரஸ் பரவியுள்ளதாக அரசு தெரியவந்துள்ளது .  இந்நிலையில் பாகிஸ்தானில் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்க,  மதப் பிரச்சினை தொடர்பாக அரசாங்கத்திற்கு ஆலோசனைகளை வழங்கும் அமைப்பான இஸ்லாமியர் சித்தாந்தக் கவுன்சில் மதகுருமார்களுக்கும்  மற்றும் பொதுமக்களுக்கும் ஊரடங்குக்கு ஒத்துழைக்க  வேண்டுமென அரசு அழைப்பு விடுத்துள்ளது .  ஆனால் உள்ளூர் மதத்தலைவர்கள் அதையெல்லாம் பொறுட்படுத்துவதில்லை, வழக்கம்போல  தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.   குறிப்பாக வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில்  ஆயிரக்கணக்கான மக்கள் மசூதிகளில் திரண்டு வழிபாட்டில் ஈடுபடுகின்றனர் .  இன்னும் இரண்டு வார காலத்திற்குள் புனித ரமலான் மாதம் தொடங்க உள்ளதால் தொழுகை நடத்துபவர்களின்  எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அதை எப்படி சமாளிப்பது எனவும் அரசு அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.  

இந்நிலையில்  கராச்சியில் கடந்த வெள்ளிக்கிழமை  மசூதி ஒன்றில்  நடைபெற்ற தொழுகையை தடுத்து நிறுத்த  போலீசார் முயன்றதில் தொழுகையில் ஈடுபட்டவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது .  அதில் ஒரு காவலர் தாக்கப்பட்டார்  இதில் ஆத்திரமடைந்த போலீசார் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர் பின்னர் அது கலவரமாக வெடித்தது .   அதேபோல் இஸ்லாமாபாத்தில் பிரதமர் இம்ரான் கான்  அலுவலகம் அமைந்துள்ள இடத்திலிருந்து  இரண்டு மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள மிகப்பெரிய மசூதியில் நூற்றுக்கணக்கானோர் தொழுகையில் ஈடுபட்ட வருகின்றனர்.  ஆனால் அரசு இதை கண்டும் காணாமலும் இருந்து வருவதாக குற்றம் சாட்டுகிறார்  எழுத்தாளர் ஆயிஷா சித்திக்கா ,  பாகிஸ்தான் அரசு ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தி இருந்தாலும் , மத விவகாரங்களிலும் ,  பாட்டாளி  வர்க்கத்தையும் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை , இதனால் அரசு  கண்டும் காணாமல் இருந்து வருகிறது என்கிறார் .  இது குறித்து தெரிவித்துள்ளார் பிரதமரின் சிறப்பு உதவியாளர் அக்பர் ஊரடங்கு அனைவரும் பின்பற்ற வேண்டும் கையில் தடிகளை வைத்துக்கொண்டு  இதை செய் என யார் மீதும் இதை திணிக்க முடியாது , அதை தடுக்க நாம் நினைத்தாலும் பாகிஸ்தான் முழுவதும் அதை நாம் செய்ய முடியாது ,  ஆனால் பல மசூதிகள் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios