இந்தியாவை பகைத்துக்கொண்டதால் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள பயங்கர ஆபத்து ..!! விழி பிதுங்கும் இம்ரான்கான்..!!

தங்கள்  பிரதமர் தங்களை பெரும் நெருக்கடியில் சிக்கவைத்து விட்டார் என இம்ரான் மீது அந்நாட்டு  மக்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.  வணிகத்தடை காரணமாக பாகிஸ்தானுக்கு பெரும் நெருக்கடி எனவும் இந்தியாவிற்கு அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்பதும் தற்போது  நிரூபணமாகிஉள்ளது .
 

Pakistan  people's  very suffer for food and vegetables price hike , after ban India and Pakistan bilateral repletion ship

இந்தியாவை பகைத்துக் கொண்டதால் பாகிஸ்தானியர்கள் தக்காளி வாங்கியே தங்கள் சொத்துக்களை அழிக்கும் நிலை உருவாகியுள்ளதாக சமூக வலைதளத்தில்  செய்திகள் வெளியாகி வருகின்றன.  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்துவந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே கடுமையான மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.  ஒர் அளவுக்கு சுமுகமாக இருந்துவந்த உறவில் விரிசல் ஏற்பட்டு பாகிஸ்தான்,  இந்தியாவை எச்சரித்தது வருவதுடன், பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்கங்களும் அடிக்கடி எல்லையில் ஊடுறுவி இந்தியாவை தாக்க முயற்சித்து வருகின்றன.  அதே நேரத்தில் இருநாடுகளும் எல்லையில் செய்து கொண்டுள்ள அமைதி உடன்படிக்கையை மீறி  பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ துருப்புகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.  இதனால் இரு நாட்டுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 Pakistan  people's  very suffer for food and vegetables price hike , after ban India and Pakistan bilateral repletion ship

காஷ்மீர் விவகாரத்தையடுத்து  இந்தியாவுடனான ராஜாங்க உறவுகளை துண்டித்துக் கொள்வதாக பாகிஸ்தான் அறிவித்தது.  இதனால் இந்தியாவிலிருந்து உணவுப் பொருட்கள் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது தடைபட்டுள்ளது.  வணிக உறவு வேண்டாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் அறிவித்ததையடுத்து இந்தியாவிலிருந்து  பாகிஸ்தானுக்கு  தக்காளி,  வெங்காயம்,  பூண்டு, கேரட்,  பீன்ஸ்,  பீட்ரூட், போன்ற  ஏராளமான உணவுப் பொருள்கள் தடைபட்டுள்ளது. பாகிஸ்தானின் அறிவிப்பை அடுத்து இந்திய வியாபாரிகளும் பாகிஸ்தானுக்கு இனி உணவு பொருட்களை அனுப்பி வைக்க மாட்டோம் என திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். இதனால் பாகிஸ்தானில் தற்போது உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது .  எனவே உணவுப் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை பாகிஸ்தானியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 

Pakistan  people's  very suffer for food and vegetables price hike , after ban India and Pakistan bilateral repletion ship

தற்சமயம் பாகிஸ்தானில் பெய்துவரும் கனமழை, மற்றும்  இந்தியாவிலிருந்து தக்காளி ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ள நிலையில்,  அங்கே காய்கறிகளின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.  குறிப்பாக தக்காளி விலை ஒரு கிலோ 160 ரூபாய் முதல் 300 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது .  இதனால் அந்நாட்டு மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.  இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் பிரதமர் திணறி வருகிறார். தங்கள்  பிரதமர் தங்களை பெரும் நெருக்கடியில் சிக்கவைத்து விட்டார் என இம்ரான் மீது அந்நாட்டு  மக்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.  வணிகத்தடை காரணமாக பாகிஸ்தானுக்கு பெரும் நெருக்கடி எனவும் இந்தியாவிற்கு அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்பதும் தற்போது  நிரூபணமாகிஉள்ளது . Pakistan  people's  very suffer for food and vegetables price hike , after ban India and Pakistan bilateral repletion ship

 இந்தியாவில் இருந்து காய்கறி உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களும் பாகிஸ்தானிற்கு , கொண்டு செல்லப்பட்ட நிலையில்,  பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு  வருவது என்னமோ,  பேரீச்சை, அத்தி,  அன்னாசிப்பழம்,  வெண்ணை,  கொய்யா மற்றும் உலர் திராட்சை போன்றவை மட்டுமே,  ஆனால் இந்தியாவில் இருந்து நாளொன்றுக்கு 70 முதல் 100 லாரி பழைய தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் பாகிஸ்தானுக்கு  ஏற்றுமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios