கொஞ்சம் கூட திருந்தல இந்த பாகிஸ்தான்.. உலகின் மிக மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் லாகூர் முதலிடம்..!
நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டு மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு PM அளவு 178 என பதிவு செய்யப்பட்டுள்ளது, அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் AQI50க்கு கீழ் உள்ள நகரங்கள் ஓரளவுக்கு பாதுகாப்பானதாக இருக்க முடியும் என கருதுகிறது
உலகின் மிக மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் பாகிஸ்தானின் கலாச்சார தலைநகர் லாகூர் முதலிடம் பெற்றுள்ளது. உலகின் மிகவும் மாசுபட்ட நகரம் எது.? என அமெரிக்காவின் காற்றுத் தரகுறியீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வின்படி உலகின் பெரு நகரங்களான பீஜிங் மற்றும் புது டில்லியை தூக்கி சாப்பிடும் அளவிற்கு பாகிஸ்தான் நாட்டின் கலாச்சார தலைநகரம் அதிக மாசுபாட்டுடன் இருப்பதாக தெரிவந்துள்ளது.
காற்றில் உள்ள மாசு ஏற்படுத்தும் துகள்களின் அளவை பொருத்து காற்று மாசுபாட்டை விஞ்ஞானிகள் அளவிடுகின்றனர். முதலாவதாக மனிதனின் தலை முடியில் 30 இல் ஒரு பங்கு அளவில் கண்ணுக்கு புலப்படாமல் இருக்கக்கூடிய PM 2.5 என்ற மாசு துகள்களின் கவனம் செலுத்துகின்றனர். ஏனெனில் இவ்வகை துகள்கள் மனிதர்களுக்கு அதிக ஆபத்தை விளைவிப்பதாகும், அத்துடன் நமது நுரையீரல்கள் மற்றும் ரத்தக் குழாய்களுக்குள் நுழையும் திறன் பெற்றவை இந்த PM 2.5 துகள்கள்.
இதனால் கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன, அடுத்ததாக காற்றில் உள்ள பெரியவகை துகள்களை வைத்து காற்று மாசுபாட்டை அளவிடுகின்றனர், PM 10 எனப்படும் பெரிய மாசு துகள்களாக இருந்தாலும் சுவாசிக்கும்போது உள்ளிழுக்கப்பட்டு உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். PM 10 எனும் மாசுபடுதலின் தரவு அடிப்படையில் பார்த்தாலும் பாகிஸ்தானின் கலாச்சார தலைநகர் லாகூர் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, லாகூரில் PM மதிப்பீடு 423 ஆக பதிவாகி உள்ளது. அதேநேரத்தில் பாகிஸ்தானின் பொருளாதார தலை நகரான கராச்சி AQI-ப்படி ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் இந்தியாவின் தலைநகரான புது தில்லி 229 என்ற AQI யுடன் அப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டு மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு PM அளவு 178 என பதிவு செய்யப்பட்டுள்ளது, அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் AQI50க்கு கீழ் உள்ள நகரங்கள் ஓரளவுக்கு பாதுகாப்பானதாக இருக்க முடியும் என கருதுகிறது லாகூரில்AQI 301 மற்றும் அதற்கு மேற்பட்ட பிரிவில் உள்ள நகரங்கள் ஆபத்து கட்டத்தில் உள்ளதாகவும் எச்சரித்துள்ளது. உணவு மற்றும் வேளாண் அமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் வல்லுனர்களின் அறிக்கையின்படி, பாகிஸ்தான் போன்ற மக்கள் நெரிசல் அதிகமுள்ள நாடுகளில் ஆண்டு முழுவதும் மாசு ஏற்பட பல்வேறு காரண காரிணிகள் உள்ளது, குறிப்பாக குண்டுவெடிப்பு, தரமற்ற சாலைகளில் போக்குவரத்து மற்ற புதுப்பிக்கப்படாத தொழிற்சாலைகள் இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
பழைய முறையிலான பல செங்கல் சூளைகள் இதற்கு மற்றொரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது, இதனால் செங்கல் சூளைகளை மூடவும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும்கூட விதிமுறைகளை மீறி ஏராளமான செங்கல் சூளைகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதே மாசுபாட்டுக்கு காரணம் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.