இந்தியா செய்யுறது ரொம்ப டேஞ்சர்... சும்மா விட்டுடக்கூடாது..? கிளம்புங்க... உலக முஸ்லீம் சமூகத்தை உசுப்பேற்றும் பாகிஸ்தான்..!

இம்ரான் கான் தீர்வு கொண்டுவர முயற்சித்தார். ஆனால், இன்று இந்த முடிவை எடுத்து நிலைமையை இன்னும் மோசமாக்கிவிட்டது இந்தியா.

Pakistan invites world Muslims against India

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

Pakistan invites world Muslims against India 

இது குறித்து அவர் பேசுகையில், ‘’இந்தியா ஒரு ஆபத்தான விளையாட்டை விளையாடுகிறது. இது அந்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்’’ என அவர் தெரிவிதுள்ளார். 

இந்நிலையில், பாகிஸ்தான் ஊடகமான துனியா நிறுவனத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி இது குறித்து கருத்து தெரிவிக்கையில், ’’அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவோடு இந்த பிரச்சனைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தீர்வு கொண்டுவர முயற்சித்தார். ஆனால், இன்று இந்த முடிவை எடுத்து நிலைமையை இன்னும் மோசமாக்கிவிட்டது இந்தியா.Pakistan invites world Muslims against India

இந்த நேரத்தில் காஷ்மீர் சகோதரர்களுக்கு பாகிஸ்தான் துணை நிற்கிறது. நாங்கள் தொடர்ந்து காஷ்மீர் மக்களுக்கு அரசியல் ரீதியாகவும் மற்ற விதங்களிலும் ஆதரவு தெரிவிப்போம். சர்வதேச முஸ்லிம் சமூகம் இந்தியாவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.Pakistan invites world Muslims against India

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் படை குவிக்கப்பட்டு, தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட நிலையில், கூச்சல் குழப்பத்துடன் நடந்த நாடாளுமன்ற மாநிலங்களவைக் கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா நான்கு சட்ட மசோதாக்களை தாக்கல் செய்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios