இந்தியாவை நெருங்கினால் தோல்வி உறுதி...!! இம்ரான்கானுக்கு அந்நாட்டு சர்வதேச வழக்கறிஞர் எச்சரிக்கை..!!
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்தியா மனித உரிமை மீறலை நடத்தி வருவதாக கூறும் அளவிற்கு பாகிஸ்தானிடம் குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று அவர் தெளிவாகக் கூறினார். இதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில், பாகிஸ்தானுக்கு இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வது மிகவும் கடினம் என குரேஷி தெரிவித்தார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்தியா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக பாகிஸ்தான் சர்வதேச நீதிமன்றத்தை நாட உள்ள நிலையில், ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் தங்களிடத்தில் இல்லை என பாகிஸ்தானுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அதற்கு இந்தியாவை பழிவாக்கும் நோக்கில் பாகிஸ்தான் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. சீனாவின் உதவியுடன் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா அத்துமீறி செயல்பட்டு வருவதமாக புகார் அளித்ததுடன் இந்தியாவை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது. ஆனால் ஐநாவில் நிரந்தர உறுப்பு நாடுகளான பிரன்ஸ், ரஷ்யா உள்ளிட் நாடுகள் அதற்கு மறுத்துவிட்டன. இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவை தலையிட பணித்தது. இதனிடையே காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் அதில் மூன்றாவது நாடுகள் யாரும் தலையிடுவதை இந்தியா அனுமதிக்காது என்று பிரதமர் மோடி எச்சரித்ததின் விளைவாக அதிபர் ட்ரம்பும் தலையிடாமல் விலகிக்கொண்டார். இதனால், தான் எடுத்த எல்லா முயற்ச்சிகளிலும் பாகிஸ்தான் தோல்வியடைந்துள்ளது.
இதனால் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரத் தொடர்பாக இந்தியாவின் மீது ச்ரவதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக பாகிஸ்தான் கூறி வருகிறது. காஷ்மீரில் மனித உரிமை மீறல்களில் இந்தியா ஈடுபடுவதாக மீது புகார் அளிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் சர்வ தேச நீதிமன்றத்தில் பாகிஸ்தானுக்காக வாதாடும் வழக்கறிஞர் கவார் குரேஷி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர். காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்தை நாட முடிவெடுத்துள்ளது உண்மைதான். ஆனால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்தியா மனித உரிமை மீறலை நடத்தி வருவதாக கூறும் அளவிற்கு பாகிஸ்தானிடம் குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று அவர் தெளிவாகக் கூறினார். இதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில், பாகிஸ்தானுக்கு இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வது மிகவும் கடினம் என குரேஷி தெரிவித்தார்.