Asianet News TamilAsianet News Tamil

சீனாவை வம்பிழுத்து அவமானப்பட்டது இந்தியா..!! பாகிஸ்தான் அமைச்சர் நக்கல் பேச்சு...!!

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில்  ஏற்பட்டுள்ள பதற்றத்தை திசைதிருப்பும் நோக்கில் இந்தியா, பாகிஸ்தான் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகிறது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

Pakistan external afire minister mahmood qureshi criticized Indian
Author
Delhi, First Published Jun 25, 2020, 11:43 AM IST

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில்  ஏற்பட்டுள்ள பதற்றத்தை திசைதிருப்பும் நோக்கில் இந்தியா, பாகிஸ்தான் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகிறது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய  எல்லை பிரச்சினையை பாகிஸ்தானை நோக்கி திசை திருப்ப இந்தியா முயற்சித்து வருகிறது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. 

Pakistan external afire minister mahmood qureshi criticized Indian

இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமாக, பயங்கர மோதல் நடைபெற்றுள்ளது. இமயமலையில் ஒரு சர்ச்சைக்குரிய பகுதியில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 20 இந்திய ராணுவ வீரர்கள்வரை கொல்லப்பட்டனர்.  எல்லைப் பிரச்சனையில்  சீனாவை தாக்கி அவமானமடைந்துள்ள இந்தியா அதிலிருந்து திசைதிருப்ப பாகிஸ்தானுக்கு எதிரான  நடவடிக்கைக்கு காரணத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என குற்றஞ்சாடினார். அதாவது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரியை நேரில் அழைத்ததுடன் தூதரக பணியாளர்கள் இந்தியாவில் உளவுபார்த்ததாகவும், 

Pakistan external afire minister mahmood qureshi criticized Indian

அவர்களுக்கு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பகவும் குற்றஞ்சாட்டியதுடன், பாகிஸ்தான் தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையை 7 நாட்களுக்குள் பாதியாக குறைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. அத்துடன் பாகிஸ்தான்  தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை பாகிஸ்தான் மிரட்டியதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டியுள்ளநிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்திய சீன எல்லை விவகாரத்தை திசை திருப்பவே பாகிஸ்தான் மீது இவ்வாறு குற்றச்சாட்டுவதாக கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios