பாகிஸ்தானில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இது குறித்த முழுமையான விவரங்களை பார்க்கலாம்.
Imran Khan nominated for Nobel Peace Prize : பாகிஸ்தானில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான முயற்சிகளுக்காக நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் உலக கூட்டமைப்பின் (PWA) உறுப்பினர்கள், கடந்த டிசம்பரில் நிறுவப்பட்ட ஒரு வழக்கறிஞர் குழு, நோர்வே அரசியல் கட்சியான பார்டியட் சென்ட்ரம் கட்சியைச் சேர்ந்தவர்கள் இம்ரான் கான் (72) பெயரை பரிந்துரைத்தனர்.
இம்ரான் கானுக்கு நோபல் பரிசு?
''பார்டியட் சென்ட்ரம் சார்பாக நாங்கள் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்காக செய்த பணிக்காக நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்" என்று பார்டியட் சென்ட்ரம் ஞாயிற்றுக்கிழமை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. "அவருக்கு எல்லா அதிர்ஷ்டமும் கிடைக்க வாழ்த்துகிறேன்," என்று அது மேலும் கூறியது.
அமைதியை மேம்படுத்திய இம்ரான் கான்
2019ம் ஆண்டில் தெற்காசியாவில் அமைதியை மேம்படுத்தியதற்காக இம்ரான் கான் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார். நார்வே நோபல் கமிட்டி ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான பரிந்துரைகளைப் பெறுகிறது, அதன் பிறகு அவர்கள் எட்டு மாத செயல்முறை மூலம் வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் தெரிவித்துள்ளது.
அணுகுண்டு முதல் ஏவுகணை வரை: ஈரானின் திறன் என்ன? உலகம் ஏன் கவலைப்படுகிறது?
இம்ரான் கான் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளது ஏன்?
பாகிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் நிறுவனருமான இம்ரான் கான், கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த ஜனவரியில், அதிகாரம் மற்றும் ஊழலை தவறாக பயன்படுத்திய வழக்கில் இம்ரான் கான் கூடுதலாக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மசூதிகளில் தொழுகையில் ஈடுபட்ட முஸ்லீம்கள் 700+ பேர் பலி.. மியான்மரில் ஏற்பட்ட துயர சம்பவம்
