பாகிஸ்தான் தேர்தல்.. இம்ரான் கான் கைகாட்டும் நபரே அடுத்த பிரதமர் - PTI கட்சி தலைவர் பாரிஸ்டர் கோஹர் அறிவிப்பு!
Pakistan Election 2024 : பாகிஸ்தான் தேர்தல் கடந்த பிப்ரவரி 8ம் தேதி நடந்து முடிந்த நிலையில் நேற்று முதல் தேர்தல் முடிவுகள் படி படியாக வெளியாகி வருகின்றது.
பாகிஸ்தான் தேர்தல் களம் உச்சகட்ட நிலையை அடைந்துள்ள இந்த நேரத்தில் அடுத்த பாகிஸ்தான் பிரதமர் யார் என்பது குறித்த கேள்விகள் தொடர்ச்சியாக எழுந்து வருகிறது. நேற்று வெளியான தகவலின்படி முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது கட்சிக்குதான் பெரும்பான்மை கிடைத்திருக்கிறது என்றும், இது குறித்து கூட்டணி கட்சிகளோடு விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால் தேர்தல் முடிவுகளில் அவருடைய கட்சி எவ்வளவு இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது என்பது குறித்த தகவல்களை அவர் வெளியிடவில்லை. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தானில் பிரதமர் வேட்பாளராக இருக்கும் இம்ரான் கானின் PTIயை கட்சியின் தலைவர் பாரஸ்டர் கோஹர் தற்பொழுது புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாக். ஆட்சி அமைப்பது யார்? பெரும்பான்மை இல்லாமலே வெற்றியை அறிவித்த நவாஸ் ஷெரீப்!
செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர் பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் யார் என்பதை கட்சியின் நிறுவனர் இம்ரான் கான் அவர்கள் தான் முடிவு செய்வார் என்றும், தங்களுடைய கட்சி நடைபெற்ற தேர்தலில் 170 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது என்றும் கூறியுள்ளார். ஆகையால் கட்சி தற்பொழுது வலுவான நிலையில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
இம்ரான் கான் சிறையில் இருக்கும் பட்சத்தில் அவருடைய கட்சி முடக்கப்பட்டாலும் வேட்பாளர்கள் சுயேட்சையாக நின்று பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே தங்களுடைய அடுத்த பிரதமர் யார் என்பதை இம்ரான் கான் அவர்கள் தான் முடிவு செய்வார், அவர் சிறைக்குள்ளே இருந்தாலும் வெளியில் இருந்தாலும் அவர்தான் எங்கள் தலைவர் என்று கூறியிருக்கிறார் பாரிஸ்டர் கோஹர்.
2 பில்லியன் டாலர் அமேசான் பங்குகளை விற்ற ஜெஃப் பெசோஸ்! 2021க்குப் பின் முதல் முறை!