Earthquake in Pakistan : பாகிஸ்தானில் இன்று 10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியிருக்கிறது என்று தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் சற்று முன் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று இரவு 10 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியிறுக்கிறது. இது தொடர்பாக மற்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. பாகிஸ்தானில் புதன்கிழமை இரவு 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.

இந்த விவரங்களை NCS தனது X பதிவில் பகிர்ந்துள்ளது. இந்த நிலநடுக்கம் 21:58:26 IST மணிக்கு ஏற்பட்டது, இதன் மையம் 31.08°N அட்சரேகை மற்றும் 68.84°E தீர்க்கரேகையில் அமைந்துள்ளது. இந்த நிலநடுக்கம் 50 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் எக்ஸ் பக்கத்தில் கூறியிருயுள்ளது. பாகிஸ்தான் உலகின் அதிக நில அதிர்வு உள்ள நாடுகளில் ஒன்றாகும், பல பெரிய பிளவுகளால் சூழப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பாகிஸ்தானில் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன மற்றும் அழிவுகரமானவை.

பாகிஸ்தான் புவியியல் ரீதியாக யூரேசிய மற்றும் இந்திய டெக்டோனிக் தட்டுகளில் அமைந்துள்ளது. பலூசிஸ்தான், கூட்டாட்சி நிர்வாக பழங்குடி பகுதிகள், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தான் மாகாணங்கள் ஈரானிய பீடபூமியில் யூரேசிய தட்டின் தெற்கு விளிம்பில் அமைந்துள்ளன. சிந்து, பஞ்சாப் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் மாகாணங்கள் தெற்காசியாவில் இந்திய தட்டின் வடமேற்கு விளிம்பில் அமைந்துள்ளன. எனவே, இரண்டு டெக்டோனிக் தட்டுகள் மோதுவதால், இந்த பகுதி கடுமையான நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொள்ளப்பட்டனர். இச்சம்பத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்கும் நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் போர் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பாபா வாங்காவின் கணிப்பும் வெளியாகியிருக்கிறது.

Scroll to load tweet…

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாபா வாங்கா என்ற கண்பார்வை இல்லாத பல்கேரிய ஞானி கூறிய எச்சரிக்கை மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. 9/11 மற்றும் கோவிட்-19 போன்ற உலக நிகழ்வுகளை முன்னறிவித்த அவர், இந்தியா-பாகிஸ்தான் போரையும் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2025-ல் ஒரு பெரிய போர் நடக்கும், இரண்டு கண்டங்களின் மக்கள்தொகையை அழிக்கும் என்று அவர் கூறியுள்ளார். இது ஆசியா மற்றும் ஐரோப்பாவாக இருக்கலாம். தற்போதைய சூழலில், இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கையில் அணு ஆயுதம் கிடைத்தால் உலகின் கதை முடிந்துவிடும். தற்போது அணு ஆயுதம் வைத்திருக்கும் இஸ்லாமிய நாடு பாகிஸ்தான். எனவே, இந்தியா-பாகிஸ்தான் போர் நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.