இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் மிராஜ்-வி ரக ஜெட்விமானங்களை வாங்க பாகிஸ்தான் ராணுவம் ஆர்வம் காட்டி வருகிறது. அதற்காக எகிப்து நாட்டுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுவருகிறது. 

காஷ்மீரில்  சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவின் மீது பாகிஸ்தான் பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டுவருகிறது. இந்தியா மீது ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் புகார் அளித்ததுடன் சீனா அமெரிக்கா போன்ற நாடுகளையும் இந்தியாவிற்கு எதிராக கொம்பு சீவ முயற்ச்சித்து அதில் படுதோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில் இந்திய எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி இந்திய இராணுவ துருப்புகளின் மீது  பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது.  அதற்கு இந்திய இராணுவம் தக்க பதிலடி கொடுத்துவரும் நிலையில் இந்தியா மீது போர் தொடுக்கவும் பாகிஸ்தான் தயங்காது, காஸ்மீருக்காக பாகிஸ்தான் எந்த எல்லைக்கும் செல்ல தயார் என்றும் மிரட்டி வருகிறது. 

,பாகிஸ்தானுக்கு ஆதரவாக எத்தனை நாடுகள்  வந்தாலும் பதிலடி கொடுக்க இந்தியா ராணுவத்தை பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதற்கான பிரன்ஸ் மற்றும் ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளிடமிருந்து அதிரக விமானங்களை இறக்குமதி செய்துவருகிறது. இந்தியாவின் நடவடிக்கைகளை கவனித்து வரும் பாகிஸ்தான் தன்பங்குக்கு,  தங்கள் நாட்டு ராணுவத்திற்கு  விமானங்களை வாங்கும்  முயற்ச்சியில்  இறங்கியுள்ளது.  குறிப்பாக புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பால்கோட்டில்  பதுங்கி இருந்த பயங்கரவாதிகளின்  மீது சக்திவாய்ந்த குண்டு வீசி இந்திய இராணுவம் அழித்தது. இந்தியா நடத்திய அந்த தாக்குதல் பாகிஸ்தானுக்கு மரண பயத்தை ஏற்படுத்தியதுடன். இந்தியாவின் விமானப்படை வலிமையை கண்டு மிரண்டது. அந்த தாக்குதலுக்கு  இந்தியா பயன்படுத்திய மிராஜ் 2000  என்ற போர் விமானம்  பாகிஸ்தான் ரேடார் கண்ணில் மண்ணை தூவிவிட்டு உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியிருந்திவிட்டு வெறிகரமாக நாடு திரும்பியதான் காரணம்,  தங்கள் நாட்டு ரேடாருக்கு தண்ணிகாட்டிய இந்தியாவின் மீராஜ்ஜைப்போல, தங்கள் நாட்டு இராணுவத்திற்கும் விமானம் தேவை என்று எண்ணியது பாகிஸ்தான்

இதனால்  மிராஜ் எங்கு கிடைத்தாலும் வாங்கவிட வேண்டும் என்று தேடியது. இந்தியாவுக்கு மிரஜ்ஜை வழங்கிய பிரன்சிடமும் தங்கள் நாட்டுக்கு மிராஜ் விமானத்தை  தர வேண்டும் என்று கோரியது பாகிஸ்தான்.  ஆனால் மிராஜ் உற்பத்தையை நிறுத்திவிட்டதாக கூறிவிட்டது பிரான்ஸ்.  இந்த நிலையில் எகிப்பு தங்களது இராணுவத்தில் வைத்திருந்து 30 மிராஜ்-வி ரக விமானங்களை ஒரங்கட்டப்போவதாக தகவல் அறிந்த பாகிஸ்தான் மிராஜ்-வி ரக ஜெட் விமானங்களை தங்கள் இராணுவத்திற்கு வாங்க முடிவு செய்து அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தையில் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் உள்ளிட்ட மற்ற நாடுகள் நினைத்து பாருக்க முடியாத அளவிற்கு இந்தியா தன்னுடைய விமானப் படை பலத்தை அதிநவீன ரபேல் பேர்விமானங்கள் மூலம் நிரப்ப உள்ள நிலையில் பாகிஸ்தான் எகிப்பு நாட்டின் ஒட்டை உடைச்சல் தளவாடங்களை வாங்க போராடி வருவது பாகிஸ்தானை கேலிக்குள்ளாக்கி உள்ளது. எகிப்திடம் பாகிஸ்தான் வாங்க உள்ள மிராஜ்-வி ரக விமானமும், இந்தியா வைத்துள்ள 2000 ரக விமானத்துடன் ஒப்பிடவே முடியாது என்றும் பாதுகாப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிராஜ் 2000 எதிரிகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் அதி தொழில்நுட்ப ஆற்றல்  கொண்ட ஜெட் விமானம் என்பது குறிப்பிடதக்கது. மிராஜ் என்பதாலேயே அது மிராஜ் 2000 க்கு இணையாகாது, ஒரு பெயருக்கு தங்களிடமும் மிராஜ் விமானம் உள்ளது என்பதை காட்டிக்கொள்ள பாகிஸ்தான் இப்படி செயல்படுகிறது என்ற விமர்சனம் எழுகிறது.