உலகிலேயே முதன் முறையாக நாடாளப்போகும் கிரிக்கெட் வீரர்… பாகிஸ்தானில் வெற்றி முகத்தை நோக்கி இம்ரான்கான் !!

Pakistan cricketer Imrankhan party leading in par.election
Pakistan cricketer Imrankhan party leading in par.election


பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டன் இம்ரான்கானின் தெரிக்--இன்சாப் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளார். ஆனால் தெரிலுல் நுட்பக் கோளாறு காரணமாக முடிவுகள் அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் 270 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து நேற்று தேர்தல் நடைபெற்றது. இதையடுத்த மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்து ஓட்டுகளை எண்ணும் பணி  உடனடியாக தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே இம்ரான் கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி முன்னிலை வகித்து வந்தது.

Pakistan cricketer Imrankhan party leading in par.election

அடுத்தடுத்த  இடங்களில் நவாஸ் ஷரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும், பெனாசிர் பூட்டோ மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் உள்ளது.  

ஆனால் 272 நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானில், பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 137 தொகுதிகளில் வென்றாக வேண்டும் என்ற நிலையில், 121  தொகுதிகளில் தெரிக்-இ-இன்சாப் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 58 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் கட்சி 35  இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது..

இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதால் இந்த தேர்தல் முடிவுகளை ஏற்கப்போவதில்லை என்றும், தேர்தல் முடிவுகளை எதிர்த்து பல கட்சிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்த உள்ளதாகவும் நவாஸ் ஷரீப் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Pakistan cricketer Imrankhan party leading in par.election

ஆனால் அதனை மறுத்த தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், தேர்தலில் எவ்வித முறைககேடும் நடைபெறவில்லை என்று தெரிவித்தனர்.

இம்ரான்கான் கட்சி அதிக இடங்களை பிடித்திருந்தாலும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என  தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 

1996ல் கட்சி தொடங்கிய இம்ரான்கான் இதுவரை பொது தேர்தல்களில் பெரியளவில் வெற்றி பெறவில்லை. எனவே, தற்போது கிடைத்துள்ள வெற்றியை அந்த கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios