கொரோனா கொடுமை தாங்க முடியாமல் கதறும் இம்ரான்கான்..!! கொஞ்சம்கூட ஆணவம் குறையல..!!
இதுவரை இந்த வைரஸில் இருந்து 15,201 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் குணமடைந்துள்ளனர் . கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 1,064 பேர் குணமடைந்துள்ளனர்
கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் சுமார் 2603 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டியுள்ளது என பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது . கடந்த 24 மணி நேரத்தில் ஐம்பது பேர் உயிரிழந்ததை அடுத்து அந்த நாட்டில் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1067 ஆக உயர்ந்துள்ளது . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது . தற்போது இந்தியாவைப் போலவே அந்த வைரஸ் பாகிஸ்தானில் தன் கொடூர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது . பெரும்பாலும் பாகிஸ்தானில் ஏழை எளிய மக்கள் என்பதாலும் , அவர்கள் மிகவும் நெரிசல் மிகுந்த பகுதிகளில் வாழ்வதாலும் அங்கு நோய் பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உயர்கிறது . நோய் தடுப்பு நடவடிக்கையாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக முழு அடைப்பை அறிவித்த நிலையில் , பெரும்பாலான அமைப்புசாரா தொழிலாளர்கள் கூலித்தொழிலாளர்கள் நடுத்தர மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஏராளமான தொழிற்சாலைகள் முடங்கியுள்ளதால் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் , பசி , பட்டினி தலை விரித்தாட தொடங்கியுள்ளது. ஏற்கனவே அதல பாதாளத்தில் வீழ்ச்சி அடைந்திருந்த பாகிஸ்தானின் பொருளாதாரம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது , இதனால் செய்வதறியாது தவித்து வரும் பிரதமர் இம்ரான்கான் , இன்னும் எத்தனை நாளைக்கு கொரோனாவுக்கு அஞ்சி வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பது.? இந்த வைரசுடன் வாழ பழகிக்கொள்ளவேண்டும் என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் . இந்நிலையில் அங்கு படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில் கொரோனா பரவல் மேலும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது . கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 2 ஆயிரத்து 603 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . நாட்டின் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 694 ஆக உயர்ந்துள்ளது . சிந்து மாநிலத்தில் 19 ஆயிரத்து 924 பேருக்கும் , பஞ்சாப் மாநிலத்தில் 18 ஆயிரத்து 455 பேருக்கும் , கைபர்-பக்துன்க்வா 7,115 பேருக்கும், பலுசிஸ்தான் 3704 பேருக்கும் , இஸ்லாமாபாத்தில் 1326 பேருக்கும் , கில்கிட்-பால்டிஸ்தான் 602 பேருக்கும் , பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 158 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதுவரை இந்த வைரஸில் இருந்து 15,201 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் குணமடைந்துள்ளனர் . கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 1,064 பேர் குணமடைந்துள்ளனர் . நாடு முழுவதும் 4 லட்சத்து 45 ஆயிரத்து 987 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது எனவும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 16 ஆயிரத்து 387 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் துபாயில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக சிக்கித்தவித்த பாகிஸ்தானை சேர்ந்த சுமார் 251 பயணிகள் எமிரேட்ஸ் சிறப்பு விமானம் மூலம் இஸ்லாமாபாத் ச்ரவதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர் . இந்நிலையில் அவர்கள் அனைவருக்கும் முறையான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு இஸ்லாமாபாத்தில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் . அதேபோல் பெஷாவரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து விரைவில் விமானங்களை இயக்கவும் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் முடிவு செய்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.