பிரச்சார கூட்டத்தில் வெடித்தது குண்டு; வேட்பாளர் உட்பட 133 பேர் உடல் சிதறி பலி!
பாகிஸ்தான் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலை படைத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133-ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் மஸ்தங் மாவட்டத்தில் அவாமி கட்சித் பேரணி மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர். பெரும் சத்தத்துடன் நடந்த குண்டு வெடிப்பில் அத்தொகுதியின் வேட்பாளர் சிராஜ் ரைசானி உடல் சிதறி பலியானார். தொடக்கத்தில் 30 பேர் வரை பலியாகி இருக்கலாம் தகவல் வெளியானது. தற்போது வந்த அறிவிப்பின் படி 133 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் 180-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தானில் இயங்கி வரும் தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. பாகிஸ்தானில் வரும் 25-ம் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதனால், அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.