எல்லைகளை தீவிரமாக கண்காணிக்க இராணுவத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடல்மார்கமாக தீவிரவாத  குழுக்களுடன் இணைந்து பாகிஸ்தான் இராணுவம் நாட்டிற்குள் நுழைய  திட்டமிட்டிருப்பதாக  இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் இந்திய கடற்பரப்பில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

ஐம்மு காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு ரத்துசெய்து, காஷ்மீரை  இந்தியாவுடன் இணைத்துக்கொண்டுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் கடுமையாக கண்டித்துவருவதுடன் காஷ்மீர் விகாரத்தை ஐநா சபைவரை கொண்டுசென்று  சர்வதேச பிரச்சனையாக மாற்ற முயற்ச்சி செய்து தோல்வியடைந்துள்ளது, இதனால் விரக்தியின் உச்சத்தில் உள்ள பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி இந்தியி எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்திவருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் இராணுவத்தின்  சிறப்பு சேவை குழு மற்றும் எல்லை நடவடிக்கை படையினர் தீவிரவாதிகளுடன் இணைந்து இந்தியாவிற்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது, குறிப்பாக அந்த குழுக்கள் நீர்மூழ்கி படகுகள் மூலம்  கடலுக்கடியில் பயணித்து குஜராத் மாநிலத்திற்குள் நுழைந்து இந்தியாவில்  நாக்குதல் நடத்தலாம் என்று உளவு பிரிவு எச்சரித்துள்ளது.

 இதனால் குஜராத் மாநில கடற்பரப்பில்  இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கடற்படையின் கப்பல்கள் ரோந்து பசியில் ஈடுபட்டு வருகின்றன, எந்த சூழலையும் சமாளிக்க இந்திய கடற்படை தயாராக உள்ளது என்று ஏற்கனவே கடற்படை தளபதி தெரிவித்திருந்த நிலையில் உளவுத்துறையில் எச்சரிக்கையால் பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  என கடற்படை  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில்  BAT எனப்படும் (BORDER ACTION FORCE)எல்லை அதிரடிப்படை வீரர்களை பாகிஸ்தான்  எல்லையில் குவித்துவருகிறது இன்று முதல் பாகிஸ்தான் தன்னுடைய கடற்பரப்பில் இரவு நேர போர் பயிற்ச்சியை தொடங்க உள்ளது என பாகிஸ்தான் இராணுவத்தின்  செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல்  அசிப் கஃபூர் தெரிவித்துள்ளார் இந்த ஒத்திகையில் சுமார் 290 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்க கூடிய கஷானவி என்ற ஏவுகணையை ஏவி ஒத்திகை பார்க்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.