இந்தியா வாங்க மாட்டேன் என புறக்கணித்த பாமாயிலை இனி பாகிஸ்தான் வாங்கும் என்றும் ,  இந்தியாவின் புறக்கணிப்பால் சரிந்த மலேசியாவின் வர்த்தகத்தை பாகிஸ்தானை ஈடுகட்டும் என்றும்  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார் .  காஷ்மீர்   விவகாரத்தில் மலேசியா தலையிட்டு வந்த நிலையில் இனி  அந்த நாட்டிடம் இருந்து இந்தியா பாமாயில் இறக்குமதி செய்யாது என அதிரடியாக  அறிவித்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இவ்வாறு கூறியுள்ளார். 

 

உலகிலேயே அதிக பாமாயில் உற்பத்தி செய்யும் நாடுகளாக உள்ளன,   இந்தோனேசியா ,  மலேசியா நாடுகளிடமிருந்து இந்தியா தான் அதிக அளவில் பாமாயில் இறக்குமதி செய்தது  கடந்த ஆண்டு மட்டும் மலேசியாவில் இருந்து சுமார் 44  லட்சம் டன்னும் ,  பாகிஸ்தான் 10.8 லட்சம் டன்னும் பாமாயில் வாங்கியுள்ளன.  இந்நிலையில் மலேசியா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ,  மலேசியாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.   இது குறித்து தெரிவித்துள்ள இம்ரான்கான்,   காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக மலேசியா கருத்து தெரிவித்ததால் ,  இந்தியா மலேசியாவின் பாமாயிலை புறக்கணித்துள்ளது .  அதுமட்டுமல்லாமல் மலேசியாவை மிரட்டும் வகையில் இந்தியா நடந்து கொண்டுள்ளது.  

என அவர் குற்றம்சாட்டியுள்ளார் ,  மலேசியாவிடமிருந்து பாமாயில்  வாங்குவதை இந்தியா குறைத்துக்கொண்டுள்ளதால்  மலேசியாவின் பொருளாதாரத்தில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது .  ஆகவே அதை ஈடுகட்டும் வகையில் மலேசியா விடமிருந்து இனி பாமாயிலை பாகிஸ்தான் இறக்குமதி செய்யும் என தெரிவித்துள்ளார்.  வழக்கத்தைவிட அதிகமாக பாமாயில் இறக்குமதி செய்ய பாகிஸ்தான்  தயாராக இருக்கிறது எனவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார் .  மேலும் சமீபத்தில் கோலாலம்பூரில் நடந்த இஸ்லாமிய உச்சிமாநாட்டில் பங்கேற்க இயலாமல் போனதற்காக வருந்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.