காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முதல் முறையாக காஷ்மீர் மற்றும் இந்திய எல்லைப்பகுதியான லடாக்கிற்கு விரைகிறார்  இந்திய எல்லைப்பகுதிகளில்  பிரிவினைவாத சக்திகளை பயன்படுத்தி பாகிஸ்தான்  குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்ச்சியில் இறங்கியுள்ளதாகவும் பாதுகாப்பு படை வீர ர்களின் மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் உள்ளதாக வந்துள்ள தகவலை அடுத்த அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்வையிட ராஜநாத் விரைகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

காஷமீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 ஐ மத்திய அரசு நீக்கியதுடன் ,காஷ்மீரை முழுவதுமாக இந்தியாவில் இணைத்து அதற்கான சட்டத்தையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. அத்துடன் காஷ்மீர் லடாக் என  இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்திருக்கிறது.  இந்த நடவடிக்கைக்குப்பின்னர் முதல்முறையாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக்கிற்கு பயணம் மேற்கொள்கிறார். காஷ்மீரில் உள்ள சில பிரிவினைவாத குழுக்களை பயண்படுத்தி காஷ்மீர் மற்றும் லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் மற்றும் அவர்களுக்கு ஆதரவான பயங்கரவாத குழுக்கள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறையின் மூலம் தகவல்கள் வந்துள்ளது.  

இதனால் ஜம்மு காஷ்மீர் லற்றும் லடாக் உள்ளிட்ட பகுதிகளில்  அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  அங்கு லட்சக்கணக்கான இராணுவ சிப்பாய்கள் மற்றும் இந்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புல்வாமா தாக்கதலைப் போல் மீண்டும் ஒரு தாக்குதல் இந்தியாவில் நடத்தப்படும் என்றும் அதாவது அந்ந தாக்குதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் இந்திய படை வீரர்களின் மீது நடத்த பாகிஸ்தான் தீவீரவாத அமைப்புகளுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளதாக உளவுத்தறை எச்சரித்துள்ள நிலையில் அங்குள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தவும் அதை நேரில் ஆய்வு செய்யவும் ராஜ்நாத்சிங் விரைகிறார்.