லாகூரில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் அருகே ட்ரோன் வெடித்து சிதறியதை அடுத்து, அனைத்து துணைத் தூதரக ஊழியர்களையும் நாட்டை விட்டு வெளியேற அல்லது பாதுகாப்பான இடங்களில் தங்க அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. லாகூரின் பிரதான விமான நிலையத்தை ஒட்டியுள்ள சில பகுதிகளில் ஊழியர்கள் தஞ்சம் அடையக் கூடும்.

லாகூரில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் அருகே இன்று காலை ட்ரோன் வெடித்து சிதறியது. லாகூர் மற்றும் அதன் அருகே ட்ரோன் வெடிப்புகள், சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்கள் மற்றும் சாத்தியமான வான்வெளி ஊடுருவல்கள் பற்றிய தகவல்கள் காரணமாக, அனைத்து துணைத் தூதரக ஊழியர்களையும் முடிந்தால் நாட்டை விட்டு வெளியேறவும் இல்லை என்றால் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அமெரிக்கா உத்தரவு பிறப்பித்துள்ளது. 

லாகூரின் பிரதான விமான நிலையத்தை ஒட்டியுள்ள சில பகுதிகளில் ஊழியர்கள் தஞ்சம் அடையக் கூடும் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதல் நிறைந்த பகுதியில் அமெரிக்கர்கள் பாதுகாப்பாக வெளியேற முடிந்தால் வெளியேற வேண்டும். வெளியேறுவது பாதுகாப்பானதாக இல்லாவிட்டால், அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும் என்று லாகூரில் இருக்கும் அமெரிக்க தூதரகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. லாகூரின் பிரதான விமான நிலையத்தை ஒட்டியுள்ள சில பகுதிகளை அதிகாரிகள் காலி செய்து வருவதாகவும் தூதரகத்திற்கு ஆரம்ப அறிக்கைகள் கிடைத்துள்ளன. 

பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்கள் தேவைக்கேற்ப செய்திகளை அனுப்பும். எனவே ஊழியர்கள் அனைவரும் Smart Traveler Enrollment Program (STEP) என்ற இணையத்தில் இணைந்து இருக்க வேண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

லாகூரில் இருக்கும் அமெரிக்க குடிமக்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்:
பாதுகாப்பான தங்குமிடம் தேட வேண்டும் 
அமெரிக்க அரசின் உதவியை எதிர்பார்க்காத வெளியேற்ற திட்டங்களை வைத்திருக்க வேண்டும் 
பயண ஆவணங்களை புதுப்பித்த நிலையில், எளிதில் அணுகக்கூடியதாகவும் வைத்திருக்க வேண்டும் 
உள்ளூர் ஊடகங்களை கண்காணிக்க வேண்டும் 
சரியான அடையாள அட்டையை எடுத்துச் சென்று அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டும் 

பயங்கரவாதம் மற்றும் ஆயுத மோதல்களுக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் இந்தியா-பாகிஸ்தான் எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது. 

கராச்சி, லாகூர் மற்றும் சியால்கோட் விமான சேவைகள் நிறுத்தம்: 

பாகிஸ்தானுக்கு உள்ளேயும் வெளியேயும் விமானங்கள் கிடைப்பது சீராக இல்லை. சில சிவிலியன் விமானங்கள் இரவு முழுவதும் இயக்கப்பதுவதாக கூறப்படுகிறது. இன்று காலை, பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் கராச்சி, லாகூர் மற்றும் சியால்கோட்டில் விமான நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. அமெரிக்க குடிமக்கள் பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களிடமோ அல்லது கீழே உள்ள விமான நிலைய இணைப்புகளிலோ விமான நிலையைச் சரிபார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.