பாகிஸ்தனின் இன்றைய பரிதாப நிலை... அடுத்த ஆஃப்கானிஸ்தான் ஆகிறதா..?
கத்தியின்றி ரத்தமின்றி ஒரு போராட்டமின்றி கேக்கினை வெட்டியது போல் அலேக்காக பாகிஸ்தானை பெற்றவர் ஜின்னா
கத்தியின்றி ரத்தமின்றி ஒரு போராட்டமின்றி கேக்கினை வெட்டியது போல் அலேக்காக பாகிஸ்தானை பெற்றவர் ஜின்னா
உலகில் போராடாமலே கிடைத்த ஒரே நாடு பாகிஸ்தான், வெள்ளையனின் நரிதந்திரமும் காந்தியின் ரகசிய இஸ்லாமிய பாசமும் அதற்கு உதவின. அந்த ஜின்னாவின் பாகிஸ்தான் 1949களிலே தடுமாறிற்று, "என் வாழ்வில் நான் செய்த பெரும் தவறு பாகிஸ்தானை உருவாக்கியது" என மன்னிப்பு கேட்டபடி கராச்சியில் மரித்தார் ஜின்னா. அந்த பாகிஸ்தான் 1950களிலே முடிந்திருக்க வேண்டிய நாடு, அதன் மிதமிஞ்சிய மதவெறியும், அப்பட்டமான இந்து எதிர்ப்பும் உற்பத்தியே இல்லா நிலையும், வடக்கு எல்லையில் கேட்ட பிரிவினை குரலும் அப்படியானவை. ஆனால் அமெரிக்க சோவியத் பனிபோரிலும், காங்கிரஸ் அரசு செய்த குளறுபடியாலும் அமெரிக்க நிதி, சீன நிதி என வாழ்ந்தது பாகிஸ்தான்.
அந்நிலை மாறி மறுபடியும் தன் பழங்காலத்துக்கே சென்றுவிட்டது பாகிஸ்தான், இப்பொழுது அந்நாடு திவாலாகி இன்னொரு ஆப்கனாக மாறும் நிலை வந்தாயிற்று. அந்த கொதிப்பில் ஜின்னா சிலைகள் தகர்க்கபடுகின்றன, நேற்று முன் தினம் குவாடர் எனும் பாகிஸ்தான் துறைமுகநகரில் இருந்த ஜின்னா சிலை தகர்க்கபட்டுள்ளது. இதை செய்தது பாகிஸ்தானை எதிர்க்கும் பலுசிஸ்தான் போராளிகள் என குற்றசாட்டு வந்தபோதும் உள்நாட்டில் பெரும் சலசலப்பே இல்லை
இந்த பைத்தியகார நாட்டை உருவாக்கியவன் சிலை இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன?" என்பது போல் பாகிஸ்தான் அமைதியாய் இருக்கின்றது.
உருவ சிலைகள் இஸ்லாத்துக்கு எதிரானது" என சொல்லும் மதவாதிகளின் சாந்த குரலும் ஓங்குகின்றது.
அந்நிய நாட்டு அடிமையாகத்தான் பாகிஸ்தானை ஜின்னா உருவாக்கினார், இதோ மேல்நாடுகள் இப்பொழுது ஆப்கனை முன்னிட்டு நம்மை கைவிட்டநிலையில் அதன் விளைவு தெரிகின்றது என முணுமுணுக்கின்றது பாகிஸ்தான். இந்து இந்தியா சரியான தலைவன் வழியில் உலக வல்லரசாய் உருவெடுத்து உலகமே இந்திய பக்கம் சாய்ந்த நிலையில் தாங்கள் அழிந்த கதை எப்படி என சிந்திக்கும் பாகிஸ்தானியருக்கு உண்மை விளங்குகின்றது
இந்திய திருநாட்டை துண்டாடிய கயவனின் உண்மை முகம் உணர்ந்து தூக்கி எறிகின்றார்கள் பாகிஸ்தானியர்கள். ஆம் பாகிஸ்தான் தேசதந்தையின் ரகசியம் உணரப்பட்டு, அவர் தூக்கி எறியப்படுகின்றார், இந்திய திருநாடும் தன் போலி தேசப்பிதாவினை விரைவில் எடுத்தெறியும். போலிகளும், பொய்யர்களும் வரலாற்றில் வாழ்வதில்லை. நல்லவர்களும் தியாகிகளும் வரலாற்றால் மறைக்கபடுவதுமில்லை. காலத்தின் நியாய தராசில் வரலாற்று முள் சரியான பக்கத்தையே எப்பொழுதும் அடையாளம் காட்டும்’’ இதுதான் பாகிஸ்தானின் தற்போதைய நிலை என பலரும் கருத்துக்கூறி வருகிறார்கள்.