குவைத்தில் பர்சை திருடிய பாகிஸ்தான் அதிகாரி...! வைரலாகும் காட்சிகள்!
பாகிஸ்தான் முதலீடு வாரிய செயலாளர் ஒருவர், அன்னிய முதலீடு தொடர்பான கூட்டம் ஒன்றில், குவைத் அதிகாரியின் பர்சை
திருடியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் முதலீடு வாரிய செயலாளர் ஒருவர், அன்னிய முதலீடு தொடர்பான கூட்டம் ஒன்றில், குவைத் அதிகாரியின் பர்சை
திருடியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து அந்த அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
குவைத் நாட்டு அதிகாரிகள் அழைக்கப்பட்டு, பாகிஸ்தான் அரசு முதலீடு திட்டங்கள் குறித்து அண்மையில், ஆலோசனைக் கூட்டம்
ஒன்று இஸ்லாமாபாத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாக்., நிதி அமைச்சகத்தின் முக்கிய அதிகாரிகள், குவைத் நாட்டின் நிதித்துறை
அதிகார்கள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தின் இடையே, அனைவரும் விருந்துக்காக வெளியே சென்றனர். அப்போது, குவைத் நாட்டு அதிகாரிகள் அமர்ந்திருந்த மேசை மீது பர்ஸ் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இதனை பாகிஸ்தானின் நிதி அமைச்சகத்தின் முதலீடு வாரியத்தின் செயலாளர் பார்த்து விட்டார்.
அறையில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த அவர், சில வினாடிகளில் அந்த பர்சை எடுத்து, தனது கோட் பாக்கெட்டில்
போட்டுக் கொண்டார். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. தினது பர்ஸ் காணாமல் போனதை அறிந்த குவைத் நாட்டு அதிகாரி, அனைவரிடமும் விசாரித்தார்.
எங்கு தேடியும் பர்ஸ் கிடைக்கவில்லை. இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. கூட்டம் நடந்த இடத்தில் அதிகாரிகள் சல்லடைப்போட்டு தேடினர். ஆனாலும் பஸ் கிடைக்கவில்லை. இதன் பிறகு, அதிகாரப்பூர்வமாக புகார் கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு
படையினர் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.