Goblin Mode:2022ம் ஆண்டின் ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியின் ‘சிறந்த வார்த்தை’ எது ? ஆன்லைன் வாக்கெடுப்பில் தேர்வு

 2022ம் ஆண்டின் ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியின் சிறந்த வார்த்தையாக ஆன்-லைன் மூலம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் “Goblind Mode” தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Oxford Dictionaries selects 'goblin mode' as the word of the year through an online vote.

 2022ம் ஆண்டின் ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியின் சிறந்த வார்த்தையாக ஆன்-லைன் மூலம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் “Goblind Mode” தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்ட் டிக்ஸ்னரி முதல்முறையாக உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆன்-லைன் வாக்கெடுப்பு நடத்தி இந்த கோப்லின் மோட் எனும் வார்த்தையை தேர்ந்தெடுத்துள்ளனர்.

கைகளில் நடுக்கம்.. படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த ரஷ்ய அதிபர் புடின்.. கவலைக்கிடமா.? அதிர்ச்சி தகவல் !

கோப்லின் மோட்  எனப்படுவது, “ சமூகத்திற்கென இருக்கும் விதிகள் கட்டுப்பாடுகள், எதிர்பார்ப்புகளை நிராகரித்து, பொருட்படுத்தாமல், தன்னுடைய விருப்பமான அடிப்படை பழக்கவழங்கள், சுயநலம், சுயவிருப்பம், சோம்பேறித்தனமாக, பேராசையுடன் வெட்மின்றி நடந்து கொள்ளும் ஒருவகையான நடத்தை” எனப்படும். 

கடந்த 2009ம் ஆண்டு இந்த கோப்லின் மோட் எனும் வார்த்தை ட்விட்டரில் டிரண்டானது. அதன்பின் 2022ம் ஆண்டில் இந்த வார்த்தை பிரபலமாகி, உலகம்முழுவதும் பரவியது.அதிலும் கொரோனா லாக்டவுனுக்குப்பின் கோப்லின் மோட் வார்த்தை வேகமாகப் பரவியது.

வங்கக் கடலுக்குள் திடீர் நிலநடுக்கம்: வங்கதேசத்தின் பெரும்பகுதி குலுங்கியது

ஆக்ஸ்போர்டு மொழிகள் பிரிவின் தலைவர் காஸ்வர் கிராத்வோல் கூறுகையில் “ நம்முடைய அனுபத்தில் கிடைத்த வார்த்தையான கோப்லின் மோட் என்பதை இந்த ஆண்டின் சிறந்த வார்த்தையைக தேர்ந்தெடுத்துள்ளார்கள்” எனத் தெரிவித்தார்

இந்த ஆண்டின் வார்த்தை என்பது, இந்த ஆண்டின் மக்களின் எண்ணங்கள், மனநிலை ஆகியவற்றை பிரதிபலிக்கும் விதத்தில் உள்ளது. முதல்முறையாக பொதுமக்கள் வாக்கெடுப்பில் 3 வார்த்தைகள் வழங்கப்பட்டு, ஒரு வார்த்தை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

ஜாம்பி வைரஸ் பற்றி முன்னரே கணித்த பாபா வாங்கா..!! அப்போது என்ன சொன்னார் தெரியுமா?

மெட்டாவெர்ஸ்(Metaverse), ஐஸ்டான்ட்வித்(#IStandWith), கோப்லின் மோட்(goblin mode) ஆகிய வார்த்தைகள் வாக்கெடுப்பில் விடப்பட்டது. கடந்த நவம்பர் 21ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதிவரை ஆன்லைன் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 93 சதவீத வாக்குகள், அதாவது 3.40 லட்சம் வாக்குகளுக்கும் அதிகமாகப் பெற்று கோப்லின்மோட் வார்த்தை தேர்ந்தெடுக்கப்பட்டது. 

கடந்த 2021ம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக வேக்ஸ்(VaX) தேர்ந்தெடுக்கப்பட்டது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios