இது எப்படி இருக்கு…? துபாய் ஐபிஎல் பைனலில் எதிரொலித்த ஒத்த ஓட்டு பாஜக…!
துபாய் ஐபிஎல் கிரிக்கெட் பைனலில் ரசிகர் ஒருவர் ஒத்த ஓட்டு பாஜக என்று பேப்பரில் எழுதி அனைவர் முன்னிலையில் காட்டியபடி இருந்தது வைரலாகி உள்ளது.
துபாய்: துபாய் ஐபிஎல் கிரிக்கெட் பைனலில் ரசிகர் ஒருவர் ஒத்த ஓட்டு பாஜக என்று பேப்பரில் எழுதி அனைவர் முன்னிலையில் காட்டியபடி இருந்தது வைரலாகி உள்ளது.
கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு இடைத்தேர்தல் முடிவுகள் தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தன. அதற்கு மிக முக்கிய காரணம், 9வது வார்டு தேர்தலில் பாஜகவை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஒரே ஒரு ஓட்டு பெற்றது தான்.
அவரின் இந்த ஒரு ஓட்டு காரணமாக இணையத்தில் ஒத்த ஓட்டு பாஜக என்ற கேலி, கிண்டல்களும், விமர்சனங்களும் எழுந்தன. இது குறித்து பதிலளித்த வேட்பாளர் கார்த்திக் தான் சுயேட்சையாக போட்டியிட்டதாகவும், சும்மா தேர்தலில் நின்று பார்ப்போமோ என்று நின்றதாகவும் சரவெடியாக விளக்கம் அளித்து இருந்தார்.
இந் நிலையில் ஒத்த ஓட்டு பாஜக என்ற வாசகம் துபாய் வரை எதிரொலித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. துபாயில் ஐபிஎல் கிரிக்கெட் பைனல் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் கொல்கத்தா, சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. போட்டியை காண ஸ்டேடியத்தில் ஆயிரக்கணக்கானோர் குழுமினர். ரசிகர்களின் பலத்த ஆரவாரங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் அனைவர் பார்வையும் ஒருவரை நோக்கி தான் இருந்தது.
அந்த ரசிகர் தமது கையில் ஒரு வெள்ளை பேப்பர் வைத்திருக்கிறார். அதில் ஒத்த ஓட்டு பாஜக என்று எழுதப்பட்டு இருக்கிறது. அவரின் இந்த நடவடிக்கை அப்படியே போட்டோ எடுக்கப்பட இணையத்தில் வைரலாகி உள்ளது.
துபாய் ஐபிஎல் கிரிக்கெட் பைனலில் ரசிகர் ஒருவர் ஒத்த ஓட்டு பாஜக என்று பேப்பரில் எழுதி அனைவர் முன்னிலையில் காட்டியபடி இருந்தது சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஒரு வார்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலும், அதன் முடிவுகளும் துபாய் வரை எதிரொலித்துள்ளதை அறிந்து பலரும் இஷ்டம் போல கமெண்ட்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்த இந்த விஷயம் இப்படி சர்வதேச அளவில் பிரபலமாகி இருப்பது அனைவர் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.